Yesuve Manalane
இயேசுவே மணாளனே – என்
நம்பிக்கையின் தீபமே
என் ஆசை ஒன்று மாத்திரமே
விண் வீட்டில் உம்மைக் காண்பதே
காணுவேன், காணுவேன்
நேசரை நான் காணுவேன்
அந்நிய கண்களாலே அல்ல
சொந்த கண்ணால் காணுவேன்
1. கண்ணீரின் பள்ளத்தாக்கிதே
உம்மில் மறைந்தே வாழுவேன்
கண் மூடும் நொடி நேரத்தில்
சேர்வேன் நான் பியூலா தீரத்தில் – காணுவேன்
2. மேகம் எழும்பி செல்லுதே
கானானின் ஓரம் காணுதே
ஆசாபாசம் ஆகும் கட்டையே
அறுத்தெறிந்திடுவோமே – காணுவேன்
3. மண்ணில் மறைந்த சுத்தரும்
மண் மீது வாழும் சித்தரும்
விண்ணில் எக்காளம் கேட்கையில்
வேகம் செல்வாரே மேகத்தில் – காணுவேன்
4. உயர்த்தெழும்பும் காலையில்
தூதர் சங்கீதம் கேட்கையில்
தங்க கிரீட கூட்டத்தில்
என்பேர் அழைக்கும் நேரத்தில் – காணுவேன்
5. என் ஓட்டமும் பிரயாசமும்
நான் காத்த என் விசுவாசமும்
வீணல்ல அது சத்தியம்
நேசரைக் காண்பேன் நித்தியம் – காணுவேன்
Opillatha Divya Anbe
1 ஒப்பில்லாத திவ்ய அன்பே
மோட்சானந்தா தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்
2 உமது நல் ஆவி தாரும்
எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
உம்மில் சார நீரே வாரும்
சுத்த அன்பின் வடிவாய்
பாவ ஆசை எல்லாம் நீக்கி
அடியாரை ரட்சியும்
விசுவாசத்தைத் துவக்கி
முடிப்பவராய் இரும்
3 வல்ல நாதா எங்கள்பேரில்
மீட்பின் அன்பை ஊற்றுமே
விரைவாய் உம் ஆலயத்தில்
வந்து என்றும் தங்குமே
வானோர்போல நாங்கள் உம்மை
நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்
ஓய்வில்லாமல் உமதன்பை
பூரிப்பாய்க் கொண்டாடுவோம்
4 உந்தன் புது சிஷ்டிப்பையும்
சுத்த தூய்மையாக்குமேன்
உந்தன் திவ்விய ரட்சிப்பையும்
பூரணப்படுத்துமேன்
எங்கள் கிரீடம் உம்முன் வைத்து
அன்பில் மூழ்கிப் போற்றியும்
மேன்மை மேலே மேன்மை பெற்று
விண்ணில் வாழச் செய்திடும்
Vilaintha Palanai Aruppaarillai
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ மனிதர் அழிகின்றாரே
1. அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த
2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்
தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த
3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த
4. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த
5. ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த
6. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த
Anpin Andavar Varugai
அன்பின் ஆண்டவர் வருகை
வேகம் நெருங்குதே
ஆத்தும ஆதாயம் செய்வோம்
வேகம் வேகமே
1. அழிவுக்கு நேராய் விரைந்திங்கு செல்வோர்
ஆயிரம் ஆயிரமாய் நம்முன் காணுதே
அறியாதவர் போல் அமைதியாய் இருந்தாலோ
ஆக்கினை நம்மேல் வருமே வேகம் வேகமே (2)
2. நோவாவின் காலம் போலவே மக்கள்
விற்பதும் கொள்வதுமாகவே இன்றே
ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார்
ஆவன செய்வீர் அதற்காய் வேகம் வேகமே (2)
3. கெர்ச்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான்
யார் யாரை விழுங்கலாமோ என்று நிற்கிறான்
அவன் தன் வலையில் சேர்க்கும் லோக மாந்தரை
அன்பரின் ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே (2)
4. அந்தகாரத்தின் நாள் நெருங்கும் முன்
அண்டிக்கொள் அன்பரின் இன்ப கரத்தை
என்று நாம் கூறியே அவர்க்காய் மக்களை
ஆதாயப்படுத்திடுவோம் வேகம் வேகமே (2)
5. எக்காள சத்தம் தொனித்திடும் வேளை
ஏகமாய் யாவரும் ஏகிடுவோமே
ஏசுவுக்காய் ஜீவிக்காதோர் அந்த நாளிலே
ஏற்றுக்கொள்ளப்படார் என்போம் வேகம் வேகமே (2)
Ulagor Unnai Pagaithalum
1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயோ
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயோ (2)
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயோ
ஊழியம் செய்ய வருவாயா (2)
3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஒடுவாயோ (2)
4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா (2)
5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக (2)
Alleluya Namathandavarai
அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து
1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை
தேன் குழலோடும் துதித்திடுவோம்
2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டு துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி
துதித்து உயர்த்திடுவோம்