VIDEO
Deva Prasannam Tharume
தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே
1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே --- தேவா
2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம் --- தேவா
3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம் --- தேவா
4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே --- தேவா
5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே --- தேவா
6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே --- தேவா
VIDEO
Vallamai Thevai Deva
வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை
1. மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே
2. பெந்தெகொஸ்தே நாளைப் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்
3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையாக ஆவியைத் தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவிகாரம் ஈந்திடும்
VIDEO
Varuthapattu Paaram Sumapavare
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
வருவீர் இயேசுவண்டை இளைப்பாற
1. தாகமுள்ளவரே வாரும் என்றார்
தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார்
தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார்
பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார்
2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள்
கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள்
நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள்
நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள்
3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள்
நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார்
கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார்
மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார்
4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார்
நானே வழி வேறில்லை என பகர்ந்தார்
களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார்
கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்
VIDEO
Magimai Matchimai
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
1. உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
3. பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
4. நித்திய தேவன் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
5. அற்புத தேவன் நீரே
ஆசீர் அளிப்பவரே
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
VIDEO
Deva Saranam
தேவா சரணம் கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசைய்யா சரணம்
1. தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவநதியே சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்திய ஆவி சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
VIDEO
Enthan Kanmalaiyanavare
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே (4)
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை
VIDEO
Uyirodu Elunthavare
1. உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -4
2. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
3. அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்