En Yesu Raja Saronin Roja
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
Konja Kalam yesuvukkaga
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப் பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் (2)
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் (2)
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச
3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் (2)
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச
4. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக (2)
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச
Vinnil Oor Natchathiram
விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
1. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்
Vinnil Oor Natchathiram
1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
2. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்
Van Velli Pragasikkuthe
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே (2)
1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்
2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்
3. இந்த மாடடை தொழுவத்திலே
அவர் மானிடனாய் பிறந்தார்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்