Ponnana Neram Ven Pani
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்
1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்
2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மேய்ப்பர் வருகிறார்
அல்லேலுயா பாடுவோம்
மேய்ப்பரை வாழ்த்துவோம்
3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
அல்லேலுயா பாடுவோம்
தேவ மைந்தரை வாழ்த்துவோம்
Yesu Manidanai Piranthar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே--- இயேசு
2.ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே --- இயேசு
3.மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே --- இயேசு
4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு
5.அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு
6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு
Maanida Uruvil Avatharitha
மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
1.ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் --- மானிட
2.கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி --- மானிட
3.இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா --- மானிட
4.அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் --- மானிட
5.கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் --- மானிட