Friday, 25 October 2019

En Meetper Sentra Pathaiyil என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetper Sentra Pathaiyil
1. என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில் பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன்   (2)
சிலுவையை சிலுவையை நான் விடேன் 

2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா
  
3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா
  
4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா

5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்
 
6. வாழ் நாளெல்லாம் நிலை நின்று சிலுவை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று மேல் வீட்டைச் சேருவேன்

Kalvari Mamalai Mel கல்வாரி மா மலைமேல்

Kalvari Mamalai Mel 
1.கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர்  இயேசு தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை (2)

2.அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் (2)

3.கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே  (2)

Yesuvin kudumpam ontru unndu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Yesuvin Kudumbam Ontru Undu
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2) 

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை 
ஏழை இல்லை பணக்காரனில்லை 
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் — இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை 
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் — இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் — இயேசுவின்




Wednesday, 23 October 2019

Kadaisi Natkalilae Kadatsikum Thevanavar கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர்

Kadaisi Natkalilae Kadatsikum Thevanavar 
கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர்
 மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியே பொழிவேனென்றார்
அருள் மாரியே பொழிவேனென்றார்  - 2

1. பெருமழையின் இரைச்சல் பெருந்தொனியாய் முழங்க - 2
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மழை பொழியுமென்றார்
இன்று அருள்மாரி பொழியுமென்றார்  – 2  --- கடைசி நாட்களிலே

2. தரிசனம் கண்டிடுவார் கரிசனை உள்ளோரெல்லாம் - 2
 பரிசுத்த வான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனை கண்டிட
பின் மாரிதனை கண்டிட  - 2   --- கடைசி நாட்களிலே

3. முழங்காலில் நின்றோரெல்லாம் முழங்கிடுவார் அன்று - 2
முழங்கால்கள் மடக்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பிவிடும்
பணி; தளங்களை நிரப்பிவிடும்  - 2  --- கடைசி நாட்களிலே

4. இந்தியாவின் மண்ணிலே சிந்திய கண்ணீரெல்லாம் - 2
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும்
தம்மை தந்தோரை எழுப்பிவிடும் – 2   --- கடைசி நாட்களிலே

Tuesday, 22 October 2019

Thasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்

Thasare Itharaniyai Anbai 
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்

Sathya Vethamana vithai சத்ய வேதமான விதை

Sathya Vethamana vithai
1.     சத்ய வேதமான
  காலை மாலை
விதைப்போம் எப்போதும்
ஓய்வில்லாமலே,
அறுப்பின் நற்காலம்
எதிர் நோக்குவோமே,
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே

அரிக்கட்டோடே
அரிக்கட்டோடே
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

2. மழையடித்தாலும்
வெயிலெரித்தாலும்
குளிர்ச்சியானாலும்
வேலை செய்வோமே;
நல்ல பலன் காண்போம்,
துன்பம் மாறிப்போகும்
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

3. கவலை, விசாரம்;
கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை
விடமாட்டோமே
இளைப்பாறக் கர்த்தர்
நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

Saturday, 19 October 2019

Kalvariyin karunaiyithae கல்வாரியின் கருணையிதே

Kalvariyin karunaiyithae
1.கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

2.பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே  --- விலையேறப்

3.சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே  --- விலையேறப்

4.எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்   --- விலையேறப்

5.மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே   --- விலையேறப்