Friday, 27 September 2019

Ullam Aanantha Geethathile உள்ளம் ஆனந்த கீதத்திலே

Ullam Aanantha Geethathile 
உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்

2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்

3. உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்

Enni Enni Thuthi Seivai எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Enni Enni Thuthi Seivai
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

Unnaiyum Ennaiyum Ratchikkave உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

Unnaiyum Ennaiyum Ratchikkave
1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் குருசில் கண்டேன்  குருசில் கண்டேன்  என் இயேசுவை

2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் குருசில் கண்டேன் குருசில் கண்டேன்   என் இயேசுவை

3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா  நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார்

4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் அழைக்கிறார்  அழைக்கிறார்  அன்புடனே

 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா அல்லேலூயா  அல்லேலூயா  ஆமென்

Kereeth Aatru Neer Vatrinalum கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

Kereeth Aatru Neer Vatrinalum
1. கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2)
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு (2)

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2)

2. இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்

3. முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்

4. இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்

Thursday, 26 September 2019

Siluvai Sumantha Uruvam சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா (2)

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்துமம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே — சிலுவை

3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் — சிலுவை

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் — சிலுவை

5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை

Siluvaiyin Nilalil சிலுவையின் நிழலில்

Siluvaiyin Nilalil
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்(2)
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையின்

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்ததென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில் (2)
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையின்

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்(2)
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்(2)
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையின்

Athisayamana Olimaya Nadam அதிசயமான ஒளிமய நாடாம்

Athisayamana Olimaya Nadam 
அதிசயமான ஒளிமய நாடாம்
   நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் (2)

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு – 2
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா

2. சந்திர சூரியன் இல்லை ஆனால்
இருள் ஏதும் காணவில்லை – 2
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் – என்றும் பகல்

3. விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை – 2
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும்

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை – 2
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி

5. பல பல திட்டம் இல்லை
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை – 2
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சியில்லை – பேரானந்தமே

6. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை – 2
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்

7. இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே – 2
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்