Saturday, 3 August 2019

Anjaathiru En Nenjame அஞ்சாதிரு, என் நெஞ்சமே

Anjaathiru En Nenjame

 1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,

உன் கர்த்தர் துன்ப நாளிலே

கண்பார்ப்போம் என்கிறார்;

இக்கட்டில் திகையாதிரு,

தகுந்த துணை உனக்கு

தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்

அநேக நீதிமான்களும்

உன்னிலும் வெகுவாய்

கஸ்தி அடைந்தும், பக்தியில்

வேரூன்றி ஏற்ற வேளையில்

வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

3. கருத்தாய் தெய்வ தயவை

எப்போதும் நம்பும் பிள்ளையை

சகாயர் மறவார்;

மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்

இரக்கமான கரத்தால்

அணைத்து பாலிப்பார்.

4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;

பேய், லோகம்,துன்பம் உனக்கு

பொல்லாப்புச் செய்யாதே;

இம்மானுவேல் உன் கன்மலை,

அவர்மேல் வைத்த நம்பிக்கை

அபத்தம் ஆகாதே.

Thollai Kashtangal தொல்லைக் கஷ்டங்கள்

Thollai Kashtangal

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான் – மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை – யார் கைவிட்டாலும்
பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்

Desame Bayapadathe தேசமே பயப்படாதே

Desame  Bayapadathe

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

1. பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே

2. தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்

3. கசந்த மாறா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

4. கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்

5. மாம்சமான யாவர் மீதும்
உன்னத ஆவியைப் பொழிவாரே
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவார்

Koodaathathu Ontrumillaiye கூடாதது ஒன்றுமில்லையே

Koodaathathu onrumillayae

கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

Friday, 2 August 2019

Jeevikiraar Yesu Jeevikiraar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

Jeevikiraar Yesu Jeevikiraar

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார்

Enakaai Jeevan Vittavare எனக்காய் ஜீவன் விட்டவரே

Enakaai Jeevan Vittavare

எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே

இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே

1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே

2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்

3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

Naan Nesikkum Devan நான் நேசிக்கும் தேவன்

Naan Nesikkum Devan

நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்

நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்

தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்

நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே