Friday, 2 August 2019

Ennai Undakiya En Devathai Devan என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

Ennai Undakiya En Devathi Devan

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவது மில்லை உறங்குவதுமில்லை (2)

1. என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே – என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே – என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் – என்னை

Singa Kuttigal Pattini Kidakkum சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

Unnathamanavarin உன்னதமானவரின்

Unnathamanavarin 

உன்னதமானவரின் உயர்
மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

அவர் செட்டையின் கீழ்
அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்

தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே

இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும் – இருளில்
நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன்

ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன்பக்கம் விழுந்தாலும் – அது
ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே

தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்

உன் வழிகளிளெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவர்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவர்

சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்

ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்

Kartharin Kai Kurugavillai கர்த்தரின் கை குறுகவில்லை

Kartharin Kai Kurugavillai 

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

1. பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே நாம் வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்

2. திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்

3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஐனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார்

4. மேகம் போன்ற வாக்குத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்

Thursday, 1 August 2019

Jeeviame Orae Jeeviame ஜீவியமே ஒரே ஜீவியமே

Jeeviame Orae Jeeviame

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும்
இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும்

2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர்
அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன்வருவோர் யார்க்கும் இதுவே வேளை

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்து சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்தபின் வருவதாது?
கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும்

5. அர்ப்பணம் தந்தையே கையளித்தேன்
கல்வி, செல்வம், சுகம், பொருள் அனைத்தும்
செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன்

Wednesday, 31 July 2019

Ekkaalathum Karthar Yesuvai

எக்காலத்தும் கர்த்தர்  இயேசுவை
 எந்தன்  துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம்  இயேசுவே
1.  மண்ணின் வாழ்வு மாயையாகும்
     மனிதன் காண்பது பொய்யாகும்
     மாறிடா நேசர் இயேசுவை
     மாறாத  அன்பு என்றும் போதுமே --  எக்காலத்தும்
2.  அலைகள் மோதி  எதிர்வந்தாலும்
     கலங்கிடேனே வாழ்க்கையிலே
    அசையா எந்தன் நம்பிக்கை
    நங்கூரம்  எந்தன் இயேசு போதுமே  --  எக்காலத்தும்
3.  அவரை   நோக்கி ஜெபிக்கும் போது
     அருகில் வந்து உதவி செய்வார்
    கைவிடாமல் கருத்துடன்
    காத்தென்னை என்றும் நடத்திடுவார்  --  எக்காலத்தும்
4.  தேவ பயமே ஜீவ ஊற்று
     மரண கண்ணிக்கு விலக்கிடுமே
    தேவ பாதையில் நடந்திட
    தேவாவியானவர் உதவி செய்வார்  --  எக்காலத்தும்
5.  முன்னறிந்து அழைத்த தேவன்
     முடிவு வரையும் நடத்திடுவார்
     தேவ சாயல்  மாறியே
     தேவாதி தேவனை துதித்திடுவேன்  --  எக்காலத்தும்

Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே

Thanthaen Ennai Yesuvae

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
               அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்
                  சரணங்கள்
     1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்