Tuesday, 16 July 2019

Kaanaatha Aattin Pinnae காணாத ஆட்டின் பின்னே

Kaanaatha Aattin Pinnae

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா

1.முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத

2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
ஏசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ – காணாத

3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத

4.துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் – காணாத

5.எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா – காணாத

Monday, 15 July 2019

Alaikkiraar Alaikkiraar Itho அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

Alaikkiraar Alaikkiraar  Itho

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ

5. கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6. சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்

Innamum Thamathamaen இன்னமும் தாமதம் ஏன்



1. இன்னமும் தாமதம்  ஏன்
    இன்ப சத்தம்  கேளாயோ
    இன்னலின்றிக் காத்திட
    இயேசுன்னை அழைக்கிறாரே

                       ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
                       நித்திய ஜீவனுண்டே
                       நீங்கிடா அவரன்பையே
                       நாடி நீ வந்திடாயோ

2. கல்வாரி மேட்டினிலே
    கரங்களை விரித்தவராய்
   காத்துன்னை ரட்சித்திட
   கனிவுடன் அழைக்கிறாரே --- ஜீவனின்

2. லோகத்தின் இன்பமெல்லாம்
     மாறிடும்   நொடிப் பொழுதில்
     மாறிடா நேசர் இயேசு
     மாண்புடன் அழைக்கிறாரே --- ஜீவனின்

3. நாளை உன் நாளாகுமோ
     நாடாயோ நாதனை நீ
    நாசலோகை மீட்டிட
    நாதன் அழைக்கிறாரே  --- ஜீவனின்

Saturday, 13 July 2019

Ennai Nesikkintrayaa என்னை நேசிக்கின்றாயா



Ennai Nesikkintrayaa

என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?

சரணங்கள்

1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் — என்னை

2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை

3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் — என்னை

 உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ!

Alaiththeerae Yesuvae அழைத்தீரே இயேசுவே



Alaiththeerae Yesuvae

அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் — அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் — அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே

Friday, 12 July 2019

Maaridaathor Nesa Meetper மாறிடாதோர் நேச மீட்பர்

Maaridaathor Nesa Meetper

மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பிவா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறி தூற்றுவார்
தூய இயேசு மெய் நேசமாய்
துன்பம் தீர்ப்பார் நம்பி வா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
என்றும் ஊறும் நம்பி வா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

Yesuvai Pinpatrum Manithargal இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்


Yesuvai Pinpatrum Manithargal

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
சரணங்கள்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன்