1. இன்னமும் தாமதம் ஏன்
இன்ப சத்தம் கேளாயோ
இன்னலின்றிக் காத்திட
இயேசுன்னை அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவனுண்டே
நீங்கிடா அவரன்பையே
நாடி நீ வந்திடாயோ
2. கல்வாரி மேட்டினிலே
கரங்களை விரித்தவராய்
காத்துன்னை ரட்சித்திட
கனிவுடன் அழைக்கிறாரே --- ஜீவனின்
2. லோகத்தின் இன்பமெல்லாம்
மாறிடும் நொடிப் பொழுதில்
மாறிடா நேசர் இயேசு
மாண்புடன் அழைக்கிறாரே --- ஜீவனின்
3. நாளை உன் நாளாகுமோ
நாடாயோ நாதனை நீ
நாசலோகை மீட்டிட
நாதன் அழைக்கிறாரே --- ஜீவனின்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.