Parisutha Aavi Engal Meethile
பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே (2)
1. இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி (2)
அந்தகாரத்தை நீக்கி விடும் (2) --- பரிசுத்த ஆவி
2. தேவ செய்தி அளிக்கவிருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்
தேவ லோகத்தின் ரகசியங்களை (2)
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் (2) --- பரிசுத்த ஆவி
3. பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் பெலமும் அருளும் (2)
வரம் தந்தெம்மை அபிஷேகியும் (2) --- பரிசுத்த ஆவி
4. பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகணிகள்
திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் (2)
திருப்திப்படுத்தி அனுப்பும் (2) --- பரிசுத்த ஆவி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.