Sunday, 7 July 2019

Varuvaai Tharunamithuvae வருவாய் தருணமிதுவே


Varuvaai Tharunamithuvae

 வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் – வருவாய்

2.கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை – வருவாய்

3.அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை – வருவாய்

4.வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே – வருவாய்

5.தீராத பாவம், வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய – வருவாய்

6.சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பெயரை ஜீவா புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார் – வருவாய்

Saturday, 6 July 2019

Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது





Intha Kaalam Pollathathu

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை  தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்  ---  இந்த

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா --- இந்த

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே  --- இந்த

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்  --- இந்த

Friday, 5 July 2019

Vaasalandai Nintru Aasaiyai வாசலண்டை நின்று ஆசையாய்



Vaasalandai Nintru Aasaiyai

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே

1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை

2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமா?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை

3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — வாசலண்டை

4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் — வாசலண்டை

5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? — வாசலண்டை

Thursday, 4 July 2019

Rettippaana Nanmaigal Thanthida இரட்டிப்பான நன்மைகள் தந்திட




Rettippaana Nanmaikal Thanthida

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

முன் மாரிமேல் பின்மாரி மழையை
உன்னதத்தினின்று வந்திறங்குதே

1. பெலத்தின் மேலே மா பெலனே
புதுபெலன் நாம் பெற்றிட
சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்    --- இரட்டிப்பான

2. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரிகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்  ---- இரட்டிப்பான

3. ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்  ---- இரட்டிப்பான

4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல் விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்  ---- இரட்டிப்பான

5. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் இயேசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்    ---- இரட்டிப்பான

6. மகிமையின் மேல் மா மகிமை
மறுரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்   ---- இரட்டிப்பான

Wednesday, 3 July 2019

Ratcha Perumane Paarum ரட்சா பெருமானே பாரும்




Ratcha Perumane Paarum

1. ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்!
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

4. ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

Arul Aeraalamaai Peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும்



Arul Aeraalamaai Peiyum

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் — அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு ! வந்தருளுமேன் !
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் — அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே — அருள்

Tuesday, 2 July 2019

Parisutha Aavi Engal Meethile பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே


Parisutha Aavi Engal Meethile

பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே (2)

1. இம்மண்டலம் முழுவதையும்
 உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி (2)
அந்தகாரத்தை நீக்கி விடும்  (2) --- பரிசுத்த ஆவி

2. தேவ செய்தி அளிக்கவிருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்
தேவ லோகத்தின் ரகசியங்களை (2)
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்  (2) --- பரிசுத்த ஆவி

3. பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் பெலமும் அருளும்  (2)
வரம் தந்தெம்மை அபிஷேகியும் (2) --- பரிசுத்த ஆவி

 4. பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகணிகள்
திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் (2)
திருப்திப்படுத்தி அனுப்பும்  (2) --- பரிசுத்த ஆவி