Monday, 10 June 2019

Siluvai Nathar Yesuvin சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Nathar Yesuvin

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Sunday, 9 June 2019

Vaan Pugal Valla வான் புகழ் வல்ல


Vaan Pugal Valla Devanaiye Nitham

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவ விடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

Saturday, 8 June 2019

Koda kodi sthothiram கோடா கோடி ஸ்தோத்திரம்



Koda kodi sthothiram


கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1.பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்

2.கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3.குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4.கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர்

5.கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவகுமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்

Friday, 7 June 2019

Thinam Thinam Yesu Nayaganai தினம் தினம் இயேசு நாயகனை

Thinam Thinam Yesu Nayaganai

தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து பாடுவேன்

 ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்  - தினம்

1.கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரைப் பாட வைத்தார்  -  ஆனந்தமாக

2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார்

3.மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான்   -  ஆனந்தமாக

4.அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன்   -  ஆனந்தமாக

Tuesday, 4 June 2019

Paadum Paadal Yesuvukaaga பாடும் பாடல் இயேசுவுக்காக


Paadum Paadal Yesuvukaaga

பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

அழகென்றால் அவர் போலே
யார்தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே

அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்

தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்

Sunday, 2 June 2019

Seer Yesu Naathanukku சீர் இயேசு நாதனுக்கு

Seer Yesu Nathanukku
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

Thothira Paathirane Deva தோத்திர பாத்திரனே தேவா

Thothira Paathirane Deva
தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1. சத்துரு பயங்களின்றி – நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர

2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே — தோத்திர

3. காரிருள் அகன்றிடவே – நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர

4. இன்றைத் தினமிதிலும் – தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர