Friday, 31 May 2019

Potri Thuthipom Em Theva Thevanai போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை




Potri Thuthipom Em Theva Thevanai
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்

Sarva Srishtikkum Yeja maanan Neerae சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே




Sarva Srishtikkum Yeja maanan Neerae
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆ ஆ ஆ.. அல்லேலூயா

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதி கானம் தொனித்து மகிழ்வாய்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்   படைக்கின்றோமே
 ஏங்குகின்றோம்   உம் ஆசீர் பெறவே

Um paatham paninthaen உம் பாதம் பணிந்தேன்



Um paatham paninthaen

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் --- உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே --- உம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் --- உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்

Kaakkum karangal undenakku காக்கும் கரங்கள் உண்டெனக்கு






Kaakkum Karangal
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை!

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

Ennil adanga sthothiram எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்




Ennil adanga sthothiram
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே

நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே

வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே

Yesuvai naam engae kanalam இயேசுவை நாம் எங்கே காணலாம்




Yesuvai Naam Enge Kanalam
 இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
இயேசுவை நாம் எங்கே காணலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே

2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்

Ananthamaga Anparai Paduven ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்



Ananthamaga Anparai Paduven
 ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷம்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்

அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்