Yesuvai Naam Enge Kanalam
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
இயேசுவை நாம் எங்கே காணலாம்
பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?
1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே
2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ
3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.