Ennalume Thuthipai
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த (2)
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே
1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (2)
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (2)
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு(2)
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் (2)
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே (2)
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே
6. தந்தை தன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால் (2)
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.