Friday, 31 May 2019

Senaiyathipan Nam Karththarukkae சேனையதிபன் நம் கர்த்தருக்கே



Senaiyathipan Nam Karththarukkae
 1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்தே அகமகிழ்வோம்

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய

Aathumavae Sthothiri Mulu Ullamae ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே



Aathumavae Sthothiri Mulu Ullamae
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா

ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்

நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்

பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்

Ananthamai Naamae Aarparipomae ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே



Ananthamai Naamae  Aarparipomae
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே – அல்லேலூயா

கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்

படகிலே படுத்து உற்ங்கினாலும்
கடும்புயல் அடித்துக் கவிழ்த்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தியெமை
காத்தாரே அல்லேலூயா

யோர்தானை கடந்தோம் அவர் பெலத்தால்
எரிக்கோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம்

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்

Ennalumae Thuthipaai எந்நாளுமே துதிப்பாய்



Ennalume Thuthipai
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த (2)
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே

1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (2)
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (2)
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு(2)
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்  (2)
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே  (2)
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே

6. தந்தை தன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்  (2)
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே

Jeyam Kodukkum Thevanukku ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு



Jeyam Kodukkum Thevanukku
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்

1. நீதியின் கரத்தினால்
தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எவருக்கும் அஞ்சிடேன்  - ஜெயம்

2. அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார்  - ஜெயம்

3. நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே
 மகிமைப்படுத்துவார்  - ஜெயம்

4. உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னைக் காப்பவர்
உறங்குவதில்லையே  - ஜெயம்

Kathavin Janamae கர்த்தாவின் ஜனமே



Karthavin Janame
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி — கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே — அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Thursday, 30 May 2019

Enthan Anbulla Aandavar எந்தன் அன்புள்ள ஆண்டவர்




Enthan anbulla aandavar
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
நீரோ வாக்கு மாறாதவரே

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை
யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்

எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே-இந்த
மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும்
இயேசுவே போதும் எனக்கு நீரே