Thursday 9 June 2022

Um Patham Paninthen உம் பாதம் பணிந்தேன்


 

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன்ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்உம்பாதம்

2. புது எண்ணெயால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதேஉம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கிக் களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர்உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்றும் கண்டிடுவேன்உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன்உம்பாதம்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.