Wednesday, 28 April 2021
Rajavaai Yesu இராஜாவாய் இயேசு
Rajavaai Yesu1. இராஜாவாய் இயேசு தூதர்கள் சூழ மேகமதில் தோன்றும் நாள் வேகமாய் நெருங்கி வந்திடுதே நாம் ஏகமாய் எழும்புவோம் பரிசுத்தமாக்கப் பட்டோரே ஒன்றாய் பறந்து வந்திடுவீர் பாவமில்லாமலே காத்திடும் நமக்காய் பரன் இயேசு வந்திடுவார் 2. கர்த்தருக்குள்ளே நித்திரையானோர் காகளம் தொனிக்கவே கண்ணிமைப் பொழுதில் கல்லறையில் நின்று வல்லமையாய் வருவார் --- பரிசுத்த 3. காயங்கள் கண்டு ஆனந்தத்தாலே கண்ணீர் சொரிந்திடுவோம் காலா காலங்களாய் கல்வாரி நேசத்தை கருத்தாய்ப் பாடிடுவோம் --- பரிசுத்த 4. ஜீவ கிரீடம் சூடிடுவோமே ஜீவனை ஊற்றியே நாம் தேவ சித்தமே செய்தோர் பெறவே ஜெயவேந்தனாய் வருவார் --- பரிசுத்த
Saturday, 24 April 2021
Vinn Magimai விண்மகிமை
Vinn Magimaiவிண்மகிமை கண்முன் கண்டேன் விண் மன்னன் ஏசென்னை அழைக்கின்றார் மண்ணுலகின்பங்கள் மாயையல்லோ வீணானதே மாறிடுதே விண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே (2) 1. மரண யோர்தான் புரண்டு வந்தால் மாலுமி ஏசுவின் கப்பல் ஏறி அக்கரையோரம் நான் சென்றிடுவேன் அங்கே வரவேற்புக் காத்திருக்கும் -- விண் 2. பரதீஸிலே பல காட்சிகள் பார்த்துப் பரவசம் பொங்கிடுமே கண்ணீர் கவலையும் அங்கில்லையே கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் -- விண் 3. ஜீவ ஜல நதி ஓடிடும் ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும் கர்த்தரின் கை கோர்த்து நடந்திட காத்து தவிக்கின்ற தென்னுள்ளமே -- விண் 4. புதிய கனி புசித்திடுவேன் பூக்கள் நடுவே உலாவிடுவேன் தூதர்கள் பக்தர்களோடு வாழும் தூய பேரின்பத்தை நாடுகிறேன் -- விண் 5. நல்ல சுகம் ஆரோக்கியமும் நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே தேவ சமூக இளைப்பாறுதல் தேவை அதை நாடி கண்டடைவேன் -- விண் 6. எத்தனையோ பிரதி பலன்கள் உத்தம ஊழியர் பெற்றிடவே ஓட்டம் ஜெயத்தோடு முடிந்திடும் ஒன்றே எனதாவல் ஏசு போதும் – விண்
Thursday, 22 April 2021
Aachariyame Athisayame ஆச்சரியமே அதிசயமே
Aachariyame Athisayameஆச்சரியமே அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக சொந்த ஜனங்களை நடத்தினாரே இஸ்ரவேலின் துதிகளாலே ஈன எரிகோ வீழ்ந்ததுவே 2. ஏழு மடங்கு எரி நெருப்பில் ஏழை தம் தாசருடன் நடந்தார் தானியேலை சிங்கக் கெபியில் தூதன் துணையாய் காத்தனரே 3. பனிமழையை நிறுத்தினாரே பக்தன் எலியா தன் வாக்கினாலே யோசுவாவின் வார்த்தையாலே ஏகும் சூரியன் நின்றதுவே 4. மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும் மாபெலன் தேவனிடம் அடைந்தான் வீழ்த்தினானே கோலியாத்தை வீரன் தாவீது கல் எறிந்தே 5. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி நம்மை ஆதரிப்பார்
Sunday, 18 April 2021
Ungalai Padaithavar உங்களைப் படைத்தவர்
1. உங்களைப் படைத்தவர்
சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க
என்றும் தம்மோடிருக்க
ஆசைப்பட்டோர் உங்களைப்
பார்த்து என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்
திரும்புங்கள் என்கிறார்.
2. உங்களை ரட்சித்தவர்
தெய்வ சுதனானவர்
திரு ரத்தம் சிந்தினார்
சிலுவையில் மரித்தார்
நீங்கள் வீணில் சாவதேன்
மரித்துங்களை மீட்டேன்
என்று கூறி நிற்கிறார்
திரும்புங்கள் என்கிறார்.
3. உங்களை நேசிப்பவர்
தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார்
குணப்பட ஏவினார்
தயை பெற வாரீரோ
மீட்பைத் தேடமாட்டீரோ
என்றிரங்கிக் கேட்கிறார்
திரும்புங்கள் என்கிறார்.
Thagam Theerkum jeevanathi தாகம் தீர்க்கும் ஜீவநதி
Thagam Theerkum jeevanathiதாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் 1. அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே 2. கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் 3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான் ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றேன் புன்னகை பூத்து புனிதனும் மறைய புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே 5. மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை என் நேசரேசுவை வாழ்த்துகிறேன்
Friday, 16 April 2021
Annai Anbilum அன்னை அன்பிலும்
Annai Anbilumஅன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் உன் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா 2. மாய லோகத்தின் வேஷமே மறைந்திடும் பொய் நாசமே மேலான நல் சந்தோஷமே மெய் தேவன் ஈவாரே 3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே தினம் அதை நீ தேடாயோ உன் தேவனை சந்தித்திட உன் ஆயத்தம் எங்கே 4. ஜீவ புத்தகம் விண்ணிலே தேவன் திறந்து நோக்குவார் உன் பேர் அதில் உண்டோ இன்றே உன்னை நிதானிப்பாய் 5. உந்தன் பாரங்கள் யாவையும் உன்னை விட்டே அகற்றுவார் உன் கர்த்தரால் கூடாதது உண்டோ நீ நம்பி வா
Wednesday, 14 April 2021
Magil Karththavin Manthaiye மகிழ் கர்த்தாவின் மந்தையே
Magil Karththavin Manthaiye1. மகிழ் கர்த்தாவின் மந்தையே மகா கெம்பீரத்துடனே பரத்துக்குன் அதிபதி எழுந்து போனதால் துதி 2. விண்ணோர்க் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மா வணக்கமாய் பணிந்த இயேசு ஸ்வாமிக்குப் புகழ் செலுத்துகின்றது 3. ஆ இயேசு தெய்வ மைந்தனே கர்த்தா பார்த்தா முதல்வரே அடியார் நெஞ்சு உமக்கு என்றைக்கும் சொந்தமானது 4. விண்ணோரைப் போல் மண்ணோர்களே நம் ஆண்டவரை என்றுமே அன்பாகக் கூடிப் பாடுங்கள் அவரின் மேன்மை கூறுங்கள்.
Tuesday, 13 April 2021
Sabaiyaare Koodi padi சபையாரே கூடிப் பாடி
Sabaiyaare Koodi padi1. சபையாரே கூடிப் பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி களிகூரக்கடவோம் இயேசு கிறிஸ்து சாவை வென்று எழுந்தார். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே லோக மீட்பர் வெற்றி வேந்தர் ஆனாரே. 3. மீட்பரே நீர் மாட்சியாக ஜீவனோடெழுந்ததால் நாங்கள் நீதிமான்களாகக் கர்த்தர் முன்னே நிற்பதால் என்றென்றைக்கும் உமக்கே மா ஸ்தோத்திரம். 4. சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் மண்ணாய்ப் போயினும் எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல கர்த்தர் அதை மீளவும் ஜீவன் தந்து மறுரூபமாக்குவார்.
Monday, 12 April 2021
Poorana Valkkaiye பூரண வாழ்க்கையே
Poorana Valkkaiye1. பூரண வாழ்க்கையே தெய்வாசனம் விட்டு தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார் தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார் நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே எங்களுக்காய் மாண்டீர் ஆ சர்வ பாவப் பலியே எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே மா நியாயத்தீர்ப்பிலும் உம் புண்ணியம் தூய மீட்பரே எங்கள் அடைக்கலம்.
Friday, 9 April 2021
Jeevanin Ootramae ஜீவனின் ஊற்றாமே
Jeevanin Ootramae1. ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன் தீர்த்திடுவார் உந்தன் தாகமதை பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிட பரிவாய் அழைக்கிறார் வல்லவரே இயேசு நல்லவரே மிக அன்பு மிகுந்தவரே இயேசு வல்லவரே அவர் நல்லவரே உனக்காகவே ஜீவிக்கிறார் 2. ஆரு மற்றவனாய் நீ அலைந்தே பாவ உளைதனிலே அமிழ்ந்தே மாழ்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர் மந்தையில் சேர்த்திடுவார் - வல்லவரே 3. வியாதியினால் நொந்து வாடுவதேனோ நேயன் கிறிஸ்து சுமந்ததனை சிலுவை மீதினில் தீர்த்ததாலே - இனி சுகமடைந்திடுவாய் - வல்லவரே 4. பரனின் அன்பதை அகமதிலே சொரிந்து தன் திரு ஆலயமாய் மாற்றியே தம்மைப்போல் தேவசாயலாக்கி மகிமை சேர்த்திடுவார் - வல்லவரே 5. வானமும் பூமியும் மாறிப்போயினும் வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர் காப்பார் வழுவாது உள்ளங்கையில் வைத்தே கலங்கிடாதே நீ வா – வல்லவரே
Wednesday, 7 April 2021
Aruvigal Aayiramaai அருவிகள் ஆயிரமாய்
Aruvigal Aayiramaai1. அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர் தாகமாய் இருக்கிறேன் என்றார் 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும் 3. அகோரமான நோவிலும் மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம் என் ஆன்மாவும் ஒன்றே 4. அந்நா வறட்சி தாகமும் என்னால் உற்றீர் பேர் அன்பரே என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே
Tuesday, 6 April 2021
Karthar Anbe Thooya Anbe கர்த்தர் அன்பே தூய அன்பே
Karthar Anbe Thooya Anbe கர்த்தர் அன்பே தூய அன்பே பக்தர்கள் போற்றும் அன்பே - என் இயேசுவின் அன்பு மா பெரிதே எப்படி பாடுவேனோ 1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம் அன்பின் அகலம் உயரம் கண்டேன் இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன் இன்றதைப் பாடிடுவேன் - என் - கர்த்தர் 2. இந்த உலகத் தோற்றம் முன்னே அந்த மேலான அன்பினிலே மாசற்றோராக நிறுத்த எம்மை மாதேவன் தெரிந்து கொண்டார் - தம்முன் - கர்த்தர் 3. என் முழு ஆத்துமா மனதுடனே என் முழு சக்தி பெலத்துடனே தேவனிடம் அன்பு கூர்ந்திடவே தேடியே நாடிடுவேன் - என் - கர்த்தர் 4. குற்றமில்லாத அன்புடனே மற்றவரை நான் நேசிக்கவே கற்பனையில் பிரதானம் ஒன்றே கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர் - கர்த்தர் 5. சத்துருவான மித்திரனை சோதரன் தோழனாய் நேசித்தீரே பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன் பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர் 6. ஜீவனைத் தந்த அன்பதுவே தேவனின் சேவை செய்திடவே கர்த்தர் வருகையை கண்டிடவே காத்திருந்தே அடைவேன்- என் - கர்த்தர் 7. ஆவியின் வரங்கள் ஒன்பதுவே ஆவியின் நற்கனி ஈந்திடுமே தேவ அருள் வரம் தேவை அதே தாகத்தைத் தீர்த்திடுமே - என்றும் - கர்த்தர்
Monday, 5 April 2021
Um Rajjiyam Varungaalai உம் ராஜ்ஜியம் வருங்காலை
Um Rajjiyam Varungaalai1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே. நம் பெலனற்ற கையை நீட்டினார். முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு இன்று என்னுடன் மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய் என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே நானும் சாகும் நேரத்தில் என்னை நினையும் என்று ஜெபித்தே உம் சிலுவையை தியானம் செய்கையில் உம் ராஜ்யத்தைக் கண்ணோக்கச் செய்யுமே. 5. ஆனால் என் பாவம் நினையாதேயும் உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர் உம் திரு சாவால் பாவமன்னிப்பும் ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர். 6. என்னை நினையும் ஆனால் உமக்கு என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ சிலுவை நோவு ரத்த வேர்வையும் சகித்த நீர் இவை மறுப்பீரோ. 7. என்னை நினையும் நான் மரிக்கும் நாள் நீயும் என்னோடு தங்குவாய் இன்றே நற் பரதீஸில் என்னும் உம் வாக்கால் என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.
Sunday, 4 April 2021
Thuyarutra Venthare துயருற்ற வேந்தரே
Thuyarutra Venthare1. துயருற்ற வேந்தரே சிலுவை ஆசனரே நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே எண்ணிறந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய் துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர். 3. தெய்வ ஏக மைந்தனார் அபிஷேக நாதனார் தேவனே என் தேவனே என்தனை ஏன் கைவிட்டீர் என்றுரைக்கும் வாசகம் கேள் இருண்ட ரகசியம் 4. துயர் திகில் இருண்டே சூழும்போது தாசரை கைவிடாதபடி நீர் கைவிடப்பட்டிருந்தீர் இக்கட்டில் சமீபம் நீர் என்றிதாலே கற்பிப்பீர்
Siluvaiyai Patri Nintru சிலுவையைப் பற்றி நின்று
Siluvaiyai Patri Nintru1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று விம்மிப் பொங்கினார் ஈன்றாள் தெய்வ மாதா மயங்கினார் சஞ்சலத்தால் கலங்கினார் பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார் சிலுவையை நோக்கிப் பார்த்தார் அந்தோ என்ன வேதனை ஏக புத்திரனிழந்து துக்க சாகரத்தில் ஆழ்ந்து சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்ற அன்னை அருந்துயருற யாவரும் உருகாரோ தெய்வ மைந்தன் தாயார் இந்த துக்க பாத்திரம் அருந்த மாதாவோடழார் யாரோ 4. தம் குமாரன் காயப்பட முள்ளால் கிரீடம் சூட்டப்பட இந்த நிந்தை நோக்கினார் நீதியற்ற தீர்ப்புப் பெற அன்பர் சீஷர் கைவிட்டோட அவர் சாகவும் கண்டார். 5. அன்பின் ஊற்றாம் இயேசுஸ்வாமி உமதன்னைக்குள்ள பக்தி என்தன் நெஞ்சில் ஊற்றிடும் அன்பினால் என் உள்ளம் பொங்க அனல் கொண்டகம் உருக அருளைக் கடாட்சியும்.
Saturday, 3 April 2021
koor Aani Thegam Paya கூர் ஆணி தேகம் பாய
koor Aani Thegam Paya1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப்பட்டார் பிதாவே இவர்கட்கு மன்னிப்பீயும் என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார் மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம் அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை கடாவினேன் இயேசுவே நானுங் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன் எனக்கும் மன்னிப்பீயும் எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ இன்ப நேச ஆழி ஆ திவ்விய உருக்கம் நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.
Subscribe to:
Posts (Atom)