Sunday, 29 November 2020

Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை

 

Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை என்றென்றும் பாடிடுவோம் அவர் உயர்ந்த நாமமதை ஒருமித்து உயர்த்திடுவோம் 1. சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே சபையாய் நம்மை அழைத்தாரே சாற்றிடுவோம் நம் துதியினையே சர்வ வல்லவராம் இயேசுவுக்கே 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து சேதமின்றி நம்மை காத்தாரே பூரிப்புடனே நாம் பாடிடுவோம் புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் 3. மரண இருளில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் 4. ஜெயத்தின் கீதங்கள் பாடிடுவோம் ஜெயமும் முழங்க துதித்திடுவோம் அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே அல்லும் பகலிலும் பாடிடுவோம் 5. பொன்னிலும் விலையேறப் பெற்றதான நல் விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம் மாற்றுவார் சாயலை அந்நாளிலே மாண்புடனே அவர் மகிமையிலே

Friday, 27 November 2020

Idhuvarai Seidha Seyalgalukkaaga இதுவரை செய்த செயல்களுக்காக


 Idhuvarai Seidha Seyalgalukkaaga

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2) 1. உவர் நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் (2) நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) 2. தனி மரமாக இருந்த என்னை கனி மரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் (2) இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும் (2) தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Thursday, 26 November 2020

Aayiram Sthothiramae ஆயிரம் ஸ்தோத்திரமே


 Aayiram Sthothiramae

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே பள்ளத்தாக்கிலே அவர் லீலி சாரோனிலே ஓர் ரோஜா 1. வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன் ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது இயேசுவின் அன்பினாலே 2. உலக மேன்மை யாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன் சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே சாத்தானை முறியடிப்பேன் 3. சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும் ஆவியில் மகிழ்ந்திடுவேன் 4. பலவித சோதனையை சந்தோஷமாய் நினைப்பேன் எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்ப்படுத்தி விசுவாசத்தில் வளர்வேன் 5. இயேசுவின் நாமத்திலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும் என்றென்றும் உம்மில் வாழ

Wednesday, 25 November 2020

Sthotharipen Sthotharipen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


 Sthotharipen Sthotharipen

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 5. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

Nandriyaal Nenjam Nirainthiduthe நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே


 Nandriyaal Nenjam Nirainthiduthe

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே 1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள் ஆறுகள் காடுகள் நீர்நிலைகள் சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள் தூயநல் தேன் மலர் தீங்கனிகள். 2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள் எழிலுடன் குழந்தைச் செல்வங்கள் துன்புறும் வேளையில் துணைக்கரங்கள் துதித்திட சொல்லுடன் ராகங்கள் 3. உறவுகள் மகிழ்ந்திட நல் நண்பர் உதவிகள் செய்திட பல்பணியர் அறவழி காட்டிட அருள் பணியர் அன்புடன் ஏற்றிட ஆண்டவர் 4.உருவுடன் விளங்கிட ஓருடலம் உடலதில் இறைவனுக்கோர் இதயம் பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய திருமறை பேசிடும் வானுலகம்

Monday, 23 November 2020

Nandriyal Padiduvom நன்றியால் பாடிடுவோம்


 Nandriyal Padiduvom

நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெருங் கிருபை மாநிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியாய் 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் 4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்களாயினாரே சத்தியத்தை சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் 5. அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லா திரு ஆக்கமிதனை அவனியோர்க்களிப்பீர் 6. உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்திரராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க 7. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையே

Friday, 20 November 2020

Kartharai Naan Ekkalathilumey கர்த்தரை நான் எக்காலத்திலுமே


 Kartharai Naan Ekkalathilumey

கர்த்தரை நான் எக்காலத்திலுமே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே கருத்துடனே துதிப்பேன் 1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும் ஆதலால் கலக்கமில்லை அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக் காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார் என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை 2.இவ்வேளை கூப்பிட்டான் கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்த்தார் அவர் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கினார் இரட்சிப்பை அருளிச் செய்தார் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை