Monday 31 August 2020

Koodathathu Ontrumillaiyae கூடாதது ஒன்றுமில்லையே

Koodathathu Ontrumillaiyae கூடாதது ஒன்றுமில்லையே (4) நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே 2. கடலின் மேல் நடந்தாரே கடும்புயல் அதட்டினாரே பாடையைத் தொட்டாரே வாலிபன் பிழைத்தானே 3. நீ விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பாயே பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே பெரிய காரியம் செய்வாயே 4. பாவங்கள் போக்குவாரே சாபங்கள் நீக்குவாரே தீராத நோய்களையும் தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே 5. லாசருவே வா என்றாரே மரித்தவன் பிழைத்தானே எழுந்திரு என்று சொன்னாரே யவீரு மகள் பிழைத்தாளே 6. வஸ்திரத்தை தொட்டாளே வல்லமை புறப்பட்டதே எப்பத்தா என்று சொன்னாரே செவிட்டு ஊமையன் பேசினானே

Vaaram Mutrum Shemamaai வாரம் முற்றும் ஷேமமாய்

Vaaram Mutrum Shemamaai 1. வாரம் முற்றும் ஷேமமாய் தேவன் காத்தார் தயவாய் ஆலயத்தில் கூடுவோம் வேதங் கேட்டு வாழ்த்துவோம் வாரத்தில் மேலானதே மோட்சம் காட்டும் நாள் இதே 2. யேசுநாதர் ரத்தத்தால் நீதியை நாம் பெற்றதால் நேசர் அவர் நாமத்தில் கூடி வேதங் கேட்கையில் லோக வேலை விட்டோய்வோம் வாஞ்சையோடாராதிப்போம் 3. தேவ ஆவி அருளால் தேவ அன்பைக் காண்பதால் ஆவலாகப் போற்றுவோம் தேவ சாயல் ஆகுவோம் மோட்ச வீட்டின் வாழ்விலே வாழ்வோமாக பாலரே 4. மாசிலா யெருசலேம் நாம் வசிக்கும் ஆலயம் நீதி அங்கி பெற்றதால் ஜோதியுள்ளோர் யேசுவால் வாரம் தோறும் பாடுவோம் வேதம் ஓதிப் போற்றுவோம்

Sunday 30 August 2020

Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும்

Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு

Anathi Devan Un Adaikalame அனாதி தேவன் உன் அடைக்கலமே

Anathi Devan Un Adaikalame அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் --- இந்த 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 5. ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

En Thevan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

En Thevan En Velicham என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்து காத்திடுவார் கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் 2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னை பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே – என்

Vananthira Yatherayil வனாந்திர யாத்திரையில்

Vananthira Yatherayil வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் (2) என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் வந்திடாமல் அங்கு பாதை ஒன்று கண்ணில் தெரியுமே விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும் வேதனை நிறைந்த வாழ்வை சத்துரு விதைத்திடும் போது மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான் தனிமை என்று எண்ணும் போது மகிமை தேவன் தாங்கிடுவாரே இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார் இனி எனக்கொன்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர

Unnathamanavarin உன்னதமானவரின்

Unnathamanavarin 1.உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் 2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் – இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் 4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் – அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே 5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் 6. உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் 7. சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் 8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்