Saturday, 30 November 2019

Paathai Kaatum Maa Yegovaa பாதை காட்டும் மாயெகோவா

Paathai Kaatum Maa Yegovaa 1. பாதை காட்டும், மாயெகோவா பரதேசியான நான் பலவீனன், அறிவீனன், இவ்வுலகம் காடுதான்; வானாகாரம் வானாகாரம் தந்து என்னைப் போஷியும். 2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை, நீர் திறந்து தாருமேன்; தீப மேக ஸ்தம்பம் காட்டும், வழியில் நடத்துமேன்; வல்ல மீட்பர் வல்ல மீட்பர் என்னைத் தாங்கும், இயேசுவே. 3. சாவின் அந்தகாரம் வந்து, என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றி தந்து, என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில் கீத வாழ்த்தல் கீத வாழ்த்தல் உமக்கென்றும் பாடுவேன்

Nal Meetper Patcham Nillum நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetper Patcham Nillum 1. நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார் 2. நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால் போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன் பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன் 3. நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும் சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர் 4. நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார் விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

Friday, 29 November 2019

Yesuvodu Sernthirupathenna Pakiam இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்

Yesuvodu Sernthirupathenna Pakiam 1.இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம் இயேசுவிற்காய் ஜீவிப்பதோர் என்ன ஆனந்தம் ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே 2. போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால் நீக்கினார் என் சாபமெல்லாம் தாம் சுமந்ததால் எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகுதே மன்னவா உம் கூட வாழ என்று கூடுமோ --- இயேசு 3. மாட்சி மிகும் நாட்டிலே நான் வாசஞ் செய்திட மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க கைகளால் கட்டிடாதோர் நித்திய ராஜ்யமே கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே --- இயேசு 4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம் அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே --- இயேசு 5. நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே அல்லல் தீர்க்க என்று வாரீர் ஆத்ம நேசரே எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட --- இயேசு

Theivanbin Vellamae தெய்வன்பின் வெள்ளமே

Theivanbin Vellamae 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான் புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் பொற்பாதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப் பாதை தவறிடினும், கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய் யாவும் பொறுத்த நாதா 4. மூர்க்ககுணம் கோபம் மோகம் சிற்றின்பமும் மேற்கொள்ளும் லோக ஏக்கம் தாக்கி தடுமாறித் தயங்கிடும் வேளையில் தூக்கித் தற்காத்தருள்வாய். 5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் பூசைப் பீடம் படைப்பேன் மோச வழிதனை முற்றுமகற்றியென் நேசனே நினைத் தொழுவேன். 6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ, மகிமையோ, வருங்காலமோ, பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, பிரித்திடுமோ தெய்வன்பை

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகங்கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்திலே இதயம் நொறுங்கி ஜெபித்தார் 1. மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை இல்லையோ தேவ தூதன் தேற்றிடவே தருணம் நெருங்க ஒப்படைத்தார் துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் 2. துக்கத்தால் தம் சீஷர்களே தலை சாய்த்து தூங்கினாரே தம்மை மூவர் கைவிடவே தூரமாய் கடந்தே திகிலடைந்தார் தன்னந்தனிமையிலே – கர்த்தர் 3. பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன் ஆகட்டும் உமது சித்தம் அது நீங்கிடுமோ என்றுரைத்தார் ஆ இரத்த வேர்வையுடன் – கர்த்தர் 4. திறந்த கெத்சமனேயில் துணிந்து வந்த பகைஞன் என்ன துரோகம் செய்திடினும் எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் என்ன மா அன்பிதுவோ – கர்த்தர் 5. இயேசு தாங்கின துன்பங்கள் என்னைத் தாண்டியே செல்லாதே எனக்கும் அதில் பங்குண்டே சிலுவை மரணப் பாடுகளால் சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

Wednesday, 27 November 2019

Kanaga Pathai Kadum Malaiyum கானகப் பாதை காடும் மலையும்

Kanaga Pathai Kadum Malaiyum
1.கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன்செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய்  --- பயப்படாதே

4.குளிர்ந்த  ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்சமரம்
கனமழையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய்  --- பயப்படாதே

5.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

6.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

7.புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன்செல்லுவாய்  ---- பயப்படாதே

Aanantha Geethangal Ennalum Paadi ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

Aanantha Geethangal Ennalum Paadi
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் – ஆனந்த