Sunday, 29 September 2019

Nee Iraivanai Thedi Kondiruka நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க

Nee Iraivanai Thedi Kondiruka
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்  (2)
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார் (2)

1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
 நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்

Karthave Thevargalil கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்  (2)

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

Enthan Kanmalaiyanavare எந்தன் கன்மலையானவரே

Enthan Kanmalaiyanavare 
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே(4)

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

Saturday, 28 September 2019

Aaseervathikum Devan Nammai ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை

Aaseervathikum Devan Nammai
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே

1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே (2)

2. அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே             
ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே (2)

3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே (2)

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே

Anbe Pirathanam Sagothara அன்பே பிரதானம் சகோதர

Anbe Pirathanam Sagothara
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

1.பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

2.பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

3.என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

4.சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

5.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

6.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

7.சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

Eppadi Paduven Nan எப்படி பாடுவேன் நான்

Eppadi Paduven Nan
எப்படி பாடுவேன் நான்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில் (2)
அடைக்காத ஆண்டவரல்லோ (2)

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே  (2)
எப்போதும் பாடிடுவேன் (2)

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே (2)
அதிகமாய் ஆசீர்வதித்தீர்(2)

Pitha Kumaran Parisutha Aaviyanavaram பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

Pitha Kumaran Parisutha Aaviyanavaram 
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கீந்து
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்