Monday, 2 September 2019

Anathi Thevan Un Adaikalame அநாதி தேவன் உன் அடைக்கலமே

Anathi Thevan Un Adaikalame

அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே – 2

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்

4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

5. ஆனந்தம் பாடியே திரும்பியே வா
தூய தேவ பலத்தால்
சீயோன் பர்வதம் உன்னை சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவேன்

Saturday, 31 August 2019

Karaiyeri Umathandai கரையேறி உமதண்டை

Karaiyeri Umathandai

1. கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ

5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

Tham Kirubai Perithallo தம் கிருபை பெரிதல்லோ

Tham Kirubai Perithallo

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே (2)

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை

2. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை

3. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை

Kirubaiyithe Theva Kirubaiyithe கிருபையிதே தேவ கிருபையிதே

Kirubaiyithe Theva Kirubaiyithe

கிருபையிதே தேவ கிருபையிதே (2)
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே - இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே --- கிருபையிதே

2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே - பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய --- கிருபையிதே

3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் --- கிருபையிதே

4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் --- கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் --- கிருபையிதே

Friday, 30 August 2019

Ungal Thukam Santhoshamaai உங்கள் துக்கம் சந்தோஷமாய்

Ungal Thukam Santhoshamaai

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே   (2)
என் இயேசு கைவிட மாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்   (2)  … கலங்கிடவே வேண்டாம்  (2)

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைகின்றார் – உன்  (2)     … கலங்கிடவே வேண்டாம் (2)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் – நீ  (2)    … கலங்கிடவே வேண்டாம் (2)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்  (2)  … கலங்கிடவே வேண்டாம் (2)

எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
எங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்துவிடும்
கலங்கிடவே மாட்டோம்
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

Vetri Kodi Pidithiduvom வெற்றிக் கொடி பிடித்திடுவோம்

Vetri Kodi Pidithiduvom

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்  (2)

1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே

2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்

3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு  பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்

Thursday, 29 August 2019

Karthar Mel Barathai கர்த்தர் மேல் பாரத்தை

Karthar Mel Barathai

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்   --- கர்த்தர்

2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்    --- கர்த்தர்

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்    --- கர்த்தர்

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?    --- கர்த்தர்

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்    --- கர்த்தர்

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்    --- கர்த்தர்