Tuesday, 27 December 2022

Deva Kirubai தேவ கிருபை


 

தேவ கிருபை என்றுமுள்ளதே

அவர் கிருபை என்றுமுள்ளதே

அவரைப் போற்றி துதித்துப்பாடி

அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்


1.     நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்

கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே

அவர் நல்லவர் அவர் வல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்

பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு

முன்சென்றாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்

முட்செடி தன்னில் தோன்றிய தேவன்

பாதுகாத்தாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்

பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்

என்னை நடத்தினார் அவர் நல்லவர்

அவர் கிருபை என்று முள்ளதே


5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்

வீரன் நெகேமியா ஆவியை அளித்தே

திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே

அவர் கிருபை என்றுமுள்ளதே


6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்

நித்தமும் நம்முடன் இருப்பதாலே

அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளதே


Monday, 26 December 2022

Thuthithu Padida துதித்துப் பாடிட


 


1. துதித்துப் பாடிட பாத்திரமே

துங்கவன் இயேசுவின் நாமமதே

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே


ஆ! அற்புதமே அவர் நடத்துதலே

ஆனந்தமே பரமானந்தமே

நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே

நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்


2. கடந்த நாட்களில் கண்மணிபோல்

கருத்துடன் நம்மைக் காத்தாரே

கர்த்தரையே நம்பி ஜீவித்திட

கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே


3. அக்கினி ஊடாய் நடந்தாலும்

ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்

சோதனையோ மிகப் பெருகினாலும்

ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே


4. இந்த வனாந்திர யாத்திரையில்

இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்

போகையிலும் நம் வருகையிலும்

புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே


5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்

வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்

வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்

விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

Wednesday, 21 December 2022

Oru Kodi Padalgal Naan Paduven ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன்


 


ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன்அதைப்

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்உந்தன்

புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

 

1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய்அதில்

மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)

என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனேஅதில்

எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2) – ஆதியும்

 

ஆதியும் நீயே அந்தமும் நீயே

பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே

போற்றுகிறேன் உனை இயேசுவே

 

2.  இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதேஅங்கு

விரிகின்ற மலர் உந்தன் அருள் பாடுதே (2)

அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம்வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்


Monday, 28 November 2022

Unnatha Devanukke Magimai உன்னத தேவனுக்கே மகிமை


 


உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் குவலய மீதினில்
பேரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

1. மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மானொளியாய் ஜெனித்தார்

2. தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடந்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

3. வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

4. தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்


Sunday, 27 November 2022

Pathai Theriyatha Aatai Pola பாதை தெரியாத ஆட்டைப் போல


 


பாதை தெரியாத ஆட்டைப் போல

அலைந்தேன் உலகிலே

நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

 

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்

பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்

கல்வாரியினண்டை வந்தேன்

 பாவம் தீர நான் அழுதேன்பாதை

 

2. என் காயம் பார்த்திடு என்றீர்

உன் காயம் ஆறிடும் என்றீர்

நம்பிக்கையோடே நீ வந்தால்

துணையாக இருப்பேனே என்றீர்பாதை

 

3. ஊனினை உருக்கிட வேண்டும்

உள்ளொளி பெருக்கிட வேண்டும்

உம் ஆவியைத் தர வேண்டும்

எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்பாதை


Friday, 4 November 2022

Alleluah Namathaandavarai அல்லேலூயா நமதாண்டவரை


 

அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன்
குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும்
பாடித் துதித்து உயர்த்திடுவோம்


Wednesday, 2 November 2022

 




அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய்  நாமும் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய்  என்றும்
வாழ்ந்திடஇந்நாளிலே

1. தேடினேன் தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார்
துயரினில் நம்மைத் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

2. அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்