Friday 4 November 2022

Alleluah Namathaandavarai அல்லேலூயா நமதாண்டவரை


 

அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன்
குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும்
பாடித் துதித்து உயர்த்திடுவோம்


Wednesday 2 November 2022

 




அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய்  நாமும் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய்  என்றும்
வாழ்ந்திடஇந்நாளிலே

1. தேடினேன் தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார்
துயரினில் நம்மைத் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

2. அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்


Tuesday 1 November 2022

Un Pugalai Paduvathu உன் புகழைப் பாடுவது


 

உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமையா
     
1. துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய் 
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2)       – உன் புகழை

2. பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய் 
அன்பினுக்கு அடைக்கும் தாழ் 
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்  (2)     -உன் புகழை

Monday 31 October 2022

En Yesuve Unnai Naan என் இயேசுவே உன்னை நான்


 

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

எந்நாளும் உன் அருளை நான்

பாடி மகிழ்ந்திருப்பேன்

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

 

1. உன் நாமம்  என் வாயில்

நல் தேனாய் இனிக்கின்றது 

உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்

செய்தியாய் ஜொலிக்கின்றது

உன் அன்பை நாளும் எண்ணும் போது

ஆனந்தம் பிறக்கின்றது. –என் இயேசுவே

 

2. உன் நெஞ்சின் கனவுகளை

நிறைவேற்ற நான் உழைப்பேன்

உறவாகும் பாலங்களை

உலகெங்கும் நான் அமைப்பேன்

இறையாட்சி மலரும் காலம் வரையில்

இனிதாய் எனை அளிப்பேன்  –என் இயேசுவே

Vanthalume Ennalume வந்தாளுமே எந்நாளுமே


 


1. வந்தாளுமே எந்நாளுமே

உன் நாமமே என் தாபமே

இந்நேரமே கண்பாருமே

 

2. தேவாவியே வரந்தாரும்

இப்பாவியின் பாவம் தீரும்

உம் ஜோதியின் ஒளிவீசும்

 

3. சத்துருக்கள் சதி செய்ய

நித்தம் என்னை நெருக்குகிறார்

அத்தனே நீர் அடைக்கலம்

 

4. இப்பாரிலே நின்பேரையே

தப்பாமலே யான் பாடியே

எப்போதுமே கொண்டாடுவேன்

 

5. என் மேசையா உன் ஆசையைக்

கொண்டோசையாய் நான் பேசவே

நின்னாசி தா நல் நேசமாய்

 

6. நாதனுன்னை எந்நேரமும்

ஓதும் ஏழைப் பாவியேனை

ஆதரித்தே ஆண்டருள்வாய்


Friday 2 September 2022

Jeevanulla Arathanai ஜீவனுள்ள ஆராதனை


 


ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை

1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே
பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே

4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே

5. எப்பொழுதும் ஆராதனை உமக்கு தானே
இப்பொழுதும் ஆராதனை உமக்கு செய்வேன்


Thursday 1 September 2022

Arathanaikuriavare Ummai ஆராதனைக்குரியவரே உம்மை


 


ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் 
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே 

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்