Monday, 16 May 2022

Yesu Ennodu Iruppatha இயேசு என்னோடு இருப்பத


 


இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
.... லலல்லாலாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா

அகிலம் ஆளும் தெய்வம்என்
அன்பு இதய தீபம்

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா

3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா


Sunday, 15 May 2022


 


போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர்  வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு


Saturday, 14 May 2022

Senaigalaai Elumbiduvom சேனைகளாய் எழும்பிடுவோம்


 


சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிவோம்புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடுவோம்  புறப்படு

புறப்படு புறப்படு
தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

1.பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
பட்டணங்கள் கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா

2. உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்

3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகளே

4. இயேசு நாமம் அறியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு

5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

புறப்பட்டோம் புறப்பட்டோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்


Friday, 13 May 2022

Athikaalaiyil Um Thirumugam அதிகாலையில் உம் திருமுகம்



 

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய்இந்த
உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

Thursday, 12 May 2022

Katti Pidithen Unthan Pathathai கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை


 


கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம்  இயேசுவுக்காய் வாழவேண்டுமே
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்

2. பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்

3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்

4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்


Wednesday, 11 May 2022

Ungal Thukkam Santhoshamai Marum உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்


 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார் – (உன்)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் – (நீ)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – (நம்)

5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே  – (என்)

6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போக மாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய் – (நீ)

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று – (உன்)

Monday, 9 May 2022

Engalukule Vasam Seiyum எங்களுக்குள்ளே வாசம் செய்யும்


 


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே ….. ஆவியானவரே….
பரிசுத்த ஆவியானவரே

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே

2. கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

3. எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீக்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே