Wednesday, 11 May 2022

Ungal Thukkam Santhoshamai Marum உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்


 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார் – (உன்)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் – (நீ)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – (நம்)

5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே  – (என்)

6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போக மாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய் – (நீ)

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று – (உன்)

Monday, 9 May 2022

Engalukule Vasam Seiyum எங்களுக்குள்ளே வாசம் செய்யும்


 


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே ….. ஆவியானவரே….
பரிசுத்த ஆவியானவரே

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே

2. கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

3. எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீக்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே


Kadanthu Vantha Paathaikalai கடந்து வந்த பாதைகளை


 

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்  நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

Sunday, 8 May 2022

Sarva Vallavar En Sonthamaanaar சர்வ வல்லவர் என் சொந்தமானார்




 

சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்)
.. ..  ..  இது அதிசயம் தானே
.. .. ..  இது உண்மைதானே

1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசு தான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3.  பரலோகத்தில் எனதுபெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வதுதான்

4.  ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்

Saturday, 7 May 2022

Appa Veetil Eppothum அப்பா வீட்டில் எப்போதும்


 

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே -- நம்ம

ஆடுவோம், கொண்டாடுவோம்
பாடுவோம், நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே

1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார்

2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கி விட்டார்

3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன்

4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார்

5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

Thursday, 5 May 2022

Ezhaigalin Belane ஏழைகளின் பெலனே


 

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்


Wednesday, 4 May 2022

Enathu Manavalane எனது மணவாளனே


 


எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன்நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (என்)

2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே (நான்)

3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக (உமக்கு)

4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா

5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக (உமக்கு)