Tuesday, 3 May 2022

Ummodu Irupathuthan உம்மோடு இருப்பது தான்


 


உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்


Enathu Thalaivan Yesu Rajan எனது தலைவன் இயேசு ராஜன்


 


எனது தலைவன் இயேசு ராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்

2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்

3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்

4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே


Monday, 2 May 2022

Yesuvin Pinnal Naan Selven இயேசுவின் பின்னால் நான் செல்வேன்


 


இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே

1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்

2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது

3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே

4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே


Sunday, 1 May 2022

Yosanail Periavare யோசனையில் பெரியவரே


 


யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே  வல்லவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. கண்மணிபோல் காப்பவரே
ஆராதனை ஆராதனை
கழுகு போல சுமப்பவரே
ஆராதனை ஆராதனை

2. சிலுவையினால் மீட்டவரே
ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே
ஆராதனை ஆராதனை

3. வழி நடத்தும் விண்மீனே
ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே
ஆராதனை ஆராதனை

4. தேடி என்னைக் காண்பவரே
ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே
ஆராதனை ஆராதனை

5. பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே
ஆராதனை ஆராதனை

6. உறுதியான அடித்தளமே
ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக் கல்லே
ஆராதனை ஆராதனை


Friday, 29 April 2022

Thaagamullavan Mel Thanneerai தாகமுள்ளவன் மேல் தண்ணீரை


 


தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்

ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன்நான்

1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்

4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும்

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும்

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்


Thursday, 28 April 2022

VinnaPathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே


 


விண்ணப்பத்தைக் கேட்பவரேஎன்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே


Wednesday, 27 April 2022

Entha Nilaiyil Naan Irunthalum எந்த நிலையில் நானிருந்தாலும்


 


எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் நடுவரே

1. நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகவைப்பார்கள்

2. கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்

3. பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்

4. அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள்