Sunday, 24 April 2022

Nantri Nantri Nantri Entru நன்றி நன்றி நன்றி என்று


 


நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயாஇயேசையா

1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே  நன்றி

2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்  நன்றி

3. உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2)
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே  நன்றி

4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே  நன்றி


Saturday, 23 April 2022

Paralogam Than En Pechu பரலோகந்தான் என் பேச்சு


 


பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை

2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன்இயேசுவை

3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன்அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்

4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும்நான்

5. கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்

6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்

Friday, 22 April 2022

Kaalmithikkum Desamellaam கால் மிதிக்கும் தேசமெல்லாம்


 

கால் மிதிக்கும் தேசமெல்லாம்என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடிஅல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள் அல்லேலூயா


Thursday, 21 April 2022

Karthar Enakkaga Yavaiyum Seivare கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே


 


கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்

1. செய்வார் எல்லாம் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்

எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்கர்த்தர்

2. கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
பெறுவேன் நன்மை பெறுவேன்
பெறாமல் இருக்கமாட்டேன்

எல்லாம் கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
பெறாமல் இருக்க மாட்டேன்கர்த்தர்

3. ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே

எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமேகர்த்தர்


Wednesday, 20 April 2022

Karam Patri Nadanthiduven கரம் பற்றி நடந்திடுவேன்


 


கரம் பற்றி நடந்திடுவேன்

கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்

அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து

ஆவியில் மகிழ்ந்திடுவேன்

இராஜாதி இராஜாவுக்கே - மகிமை

இயேசு ராஜனுக்கே

 

இறங்கிடும் தேவ ஆவியே - என்னை

நிரப்பிடும் வல்ல ஆவியே

 

1. சத்துரு கோட்டைகளை

இயேசு இரத்தத்தால் ஜெயித்திடுவேன்

சத்திய ஆவி துணைகொண்டு

என்றும் புதுபெலன் அடைந்திடுவேன்

 

2. நெருக்கங்கள் வரும்போது - என்

நேசர் என் பட்சம் உண்டு

துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன்

அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

 

3. அற்புதம் நடந்திடுமே - என்றும்

மாறிடா தேவ அன்பால்

அல்லேலூயா பாடிடுவோம் - நம்

அதிசய தேவனுக்காய்


Monday, 18 April 2022

Elshadai Enthan Thunai எல்ஷடாய் எந்தன் துணை


 


எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்


Sunday, 17 April 2022

Ejamanane En Yesu Rajane எஜமானனே என் இயேசு ராஜனே


 


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்குஎன்னை
அதை நான் மறப்பேனோ

3. அப்பா உம் சந்நிதியில்தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்