Monday, 28 March 2022

Magimaiyin Nambikkaiye மகிமையின் நம்பிக்கையே

 





மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்


Magimai Umakkantro மகிமை உமக்கன்றோ


 


மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ

ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே

1.விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

2.வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

3.எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

4.உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ


Saturday, 26 March 2022

Puthiya Paadal Paadi புதிய பாடல் பாடி


 

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலேஎனக்கு

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரேதினமும்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனேஎல்லா

4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரேஇயேசு

5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம்அவர்

Friday, 25 March 2022

Priyamanavane Un Aathuma பிரியமானவனே உன்ஆத்துமா




 

பிரியமானவனேஉன்
ஆத்துமா வாழ்வது போல்நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

Pithave Aaraathikkintrom பிதாவே ஆராதிக்கின்றோம்

 

                              



பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம்

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்










Wednesday, 23 March 2022

Nesare Um Thiru Paatham நேசரே உம் திரு பாதம்

 




நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா

வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி பாவங்களெல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை









Natha Um Thirukarathil நாதா உம் திருக்கரத்தில்


 


நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே  

2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா -- உம்

5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்