Sunday, 2 January 2022

Thesamae Payapadathe Magilnthu தேசமே பயப்படாதே மகிழ்ந்து


 


Thesamae payapadaathe
Magilnthu kalikooru
Mannavar Yesu unthanuke
maberum kariyam seithiduvar

1. Selipana puthuvalvu
Thevane aruliduvar
Sugavalvu samathanam
Santhosham thanthiduvar

2. Malaipola varuvathellam
Pani pol marainthidumae
Unnatharin kirubaigalum
Unthanai soolnthidume

3. Thevanudan uravu kondu
Thinam thinam valnthiduvai
Immaiyilum marumaiyilum
Inpathai rusithiduvai


Friday, 31 December 2021

Yesu Raja Munne Selkirar இயேசு ராஜா முன்னே செல்கிறார்


 

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

1. அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே

3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே


Thursday, 30 December 2021

Magimai Matchimai Nirainthavarae மகிமை மாட்சிமை நிறைந்தவரே


 


மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் முடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம்மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம்மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம்மகிமை

4. நித்திய தேவன் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம்மகிமை

5. அற்புத தேவன் நீரே
ஆசீர் அளிப்பவரே
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம்மகிமை


Wednesday, 29 December 2021

Thuthipom Alleluah Padi துதிப்போம் அல்லேலூயா பாடி


 


துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமைதேவ
தேவனுக்கே மகிமைஅல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்

2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்

3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்

4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்

5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்


Tuesday, 28 December 2021

Uyirodu Eluntha En Yesuvae உயிரோடு எழுந்த என் இயேசுவே


 


உயிரோடு எழுந்த என் இயேசுவே

நான் வாழுவேன் உமக்காகவே

நீர் ஒருவரே ஆண்டவர்

நீர் ஒருவரே ரட்சகர்

 

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

சர்வ வல்லவரே

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

சமாதான காரணரே

 

1. மரித்து போன அந்த லாசரு

அன்று தேடியே இயேசு வந்தீரே

உந்தன் வாயின் வார்த்தையால்

அங்கு ஜீவன் வந்தது

 

2. சிலுவையின் அந்த போரிலே

இயேசு நீரே மரித்து போனீரே

ஆனால் உயிரோடு எழுந்தீரே

அந்த எதிரியை ஜெயித்தீரே


Monday, 27 December 2021

Ellai illa Kirubai எல்லை இல்லா கிருபை


 

எல்லை இல்லா கிருபை

என்னைச் சூழ்ந்து கொள்ளும்

இந்தப் புதிய நாளில்

உமது அருளைப் பொழியும்

 

1. மனிதன் கதவை அடைப்பான்

என் தேவன் அதையே திறப்பார்

மனிதன் அன்பு மாறும்

என் நேசர் என்றும் மாறார்

 

2. பூர்வ நாளை நினைத்தேன்

உம் புண்ணிய செயலை உணர்ந்தேன்

எண்ணில்லா நன்மைகள் அடைந்தேன்

என் இயேசுவை என்றும் மறவேன்

 

3. நெஞ்சம் நொந்த போது

தஞ்சம் தந்த தேவன்

நான் வாடி நின்ற போது

என்னைத் தேடி வந்த தேவன்

 

4. வீசும் புயலின் நடுவில்

கலங்கும் வாழ்க்கை படகில்

இயேசு துணையாய் வருவார்

என்னைப் பாசத்தோடு காப்பார்


Sunday, 26 December 2021

Jebame Jeyam Jebam Jeyam ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்


 

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2)
ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2)

1. சத்துரு கோட்டையை தகர்த்திடவே
நம் ஜெபமே பேராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

2. அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட
ஜெபமே பேராயுதம்
போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

3. அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட
ஜெபமே பேராயுதம்
போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்