Monday, 8 November 2021

Ennidathil Palar Yarum என்னிடத்தில் பாலர் யாரும்


 

1. என்னிடத்தில் பாலர் யாரும்
வர வேண்டும் என்கிறார்
இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்
என்று சொல்லி நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா மா ஸ்தோத்திரம்
என்று பாடி சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி பக்தியாய்
இயேசுவை வணங்கி என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்

3. பாலனாய் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்
நல்லோர் தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்


Sunday, 7 November 2021

Alaithavarae Nadathiduvar அழைத்தவரே நடத்திடுவார்


 


அழைத்தவரே நடத்திடுவார்

நம்பினவர் நானறிவேன்

நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே

நன்றியுடன் துதித்திடுவேன்

 

1. பச்சை மரம் உந்தனுக்கே

பாடுகளின் வழியானால்

பட்டமரம் எங்களுக்கே

பாருலகம் என்ன செய்யும்

 

2. குற்றமில்லா உந்தனையே

குறை சொல்லும் உலகமிது

குற்றமுள்ள மனிதனே நான்

குருவே உம் அருள் வேண்டும்

 

3. நம்பினவன் மறுதலித்தான்

நண்பனவன் சதி நினைத்தான்

நல்லவரைப் பகைத்து விடும்

நன்றியில்லா உலகமிது

 

4. சிங்காசனம் விட்டு வந்து

சிலுவை மரம் சுமந்தவரே

நினைத்திடுவேன் உம் சிலுவை

சகித்திடுவேன் துன்பங்களை

 

5. ஜீவனையும் வெறுத்தவனே

ஜீவனதை அடைந்திடுவான்

சீக்கிரமாய் வந்திடுவீர்

சேர்ந்திடுவேன் உம் சமூகம்


Friday, 5 November 2021

Singara Maligaiyil சிங்கார மாளிகையில்


 


சிங்கார மாளிகையில்
ஜெய கீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

3. முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

4. பூமியின் அரசைப் புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால்
எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

6. குருசை சுமந்த பரிசுத்தர் முன்னால்
குருத்தோலை பிடித்திடுவோம் அங்கே
கற்புள்ள கறைபடா கர்த்தரைப் பின்பற்றினோர்
மீட்பின் கீதம் பாடுவோம்


Thursday, 4 November 2021

Potrum Potrum போற்றும் போற்றும்


 


1. போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்
பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய
மாந்தர் யாரும் வாரும் ஆனந்தமாய்
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசுநாதர் நம்மையும் தாங்குவார்
போற்றும் போற்றும் தெய்வகுமாரனைப் போற்றும்
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்

2. போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்
பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்
வாழ்க, வாழ்க ஜெகத்து இரட்சகா
அருள் நாதா மாசணுகா பரஞ்ஜோதி
வல்ல நாதா கருணை நாயகா

3. போற்றும், போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,
போற்றும் போற்றும் மீட்பர் மகத்துவமாக
ஆட்சி செய்வார் நித்திய காலமும்,
இயேசு ராஜா மாட்சிமையோடு வந்து
இயேசு ஸ்வாமி பூமியில் ஆளுமேன்
லோகமெங்கம் நீதியின் செங்கோலை ஒச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்


Yesu Kiristhuvin Namamithae இயேசு கிறிஸ்துவின் நாமமிதே


 


இயேசு கிறிஸ்துவின் நாமமிதே

இனிமையாமே இன்பமதுவே

ஏழைக்கும் ஆறுதலே

 

1. நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே

நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே

நாதன் இயேசுவின் நாமமதையே

நன்றியுடன் புகழ்வோம்     - இயேசு          

 

2. அளிப்பேன் யாவையுமே என் நாமத்தில் என்றனரே

அளிக்க வலியவனை வல்லமையுண்டதிலே

களிப்போம் வல்ல நாமமதிலே

கனிந்தே பாடிடுவோம்    - இயேசு           

 

3. நோய்கள் நீக்கிடவும் நவ பாஷைகள் பேசிடவும்

சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்ததுவும்

உத்தமர்கள் போற்றிப் புகழும்

கர்த்தரின் நாமமதே  - இயேசு                 

 

4. சாவுக்கேதுவான கொடும் நஞ்சைப் பருகிடினும்

சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே

நாதன் ஈந்த தைலமெனவே

நமக்காய் ஊற்றுண்டதே   - இயேசு            

 

5. பாவ இருளதனை போக்கும் புண்ணிய நாமமதாய்

பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே

இயேசு கிறிஸ்து நேசரிவரே

ஆசைக்குகந்தவரே    - இயேசு          


Tuesday, 2 November 2021

Deva Pitha Enthan தேவ பிதா எந்தன்


 

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்

அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

 

1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி

அடியேன் கால்களை நீதி என்னும்

நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்

நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

 

2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும்

சற்றும்  தீங்கு கண்டஞ்சேனே

வான பரன் என்னோடிருப்பார்

வளை தடியும் கோலுமே தேற்றும்

 

3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி

பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்

சுக தைலம் கொண்டென் தலையைச்

சுகமாய் அபிஷேகம் செய்குவார்

 

4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்

அருளும் நலமுமாய் நிரம்பும்

நேயன் வீட்டினில் சிறப்போடே

நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்

Monday, 1 November 2021

Poovin Nal Vasam Veesum பூவின் நல்வாசம் வீசும்


 


1. பூவின் நல்வாசம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்ற கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்பின்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்பின்