Monday, 1 November 2021

Poovin Nal Vasam Veesum பூவின் நல்வாசம் வீசும்


 


1. பூவின் நல்வாசம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்ற கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்பின்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்பின்


Sunday, 31 October 2021

En Ullam Kavaraai என் உள்ளங் கவராய்


 

என் உள்ளங் கவராய் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட

என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டைஎன்

1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திடஎன்

2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திடஎன்

3. உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். – என்

4. அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திடஎன்



 

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமேஅதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தேபாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

2. பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம்பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம்அதைப்
பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே

Friday, 29 October 2021

Salemin Rasa Sangaiyin Rasa சாலேமின் ராசா சங்கையின் ராசா

1. சாலேமின் ராசா சங்கையின் ராசா

ஸ்வாமி வாருமேன் இந்தத்

தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்

சடுதி வாருமேன் --- சாலேமின்

 

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன

செல்வக்குமாரனே - இந்தச்

சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற

செய்தி கேளீரோ --- சாலேமின்

 

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்

கண்பூத்துப் போகுதே -நீர்

சுட்டிக்காட்டிப் போன வாக்குத்தத்தம்

நிறைவேறலாகுதே --- சாலேமின்

 

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை

நாடித்தேடுதே - இந்த

நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்

தேடி வாடுதே --- சாலேமின்

 

5. சாட்சியாகச் சுபவிசேஷம்

தாரணிமேவுதே - உந்தஞ்

சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்

தாவிக் கூவுதே --- சாலேமின்

 

Thursday, 28 October 2021

Saruva Logathipa Namaskaram சருவ லோகாதிபா நமஸ்காரம்


 

1. சருவ லோகாதிபா நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம்.

2. திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.

3. பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.

4. முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா கருணாசமுத்திரா
நித்ய திரியேகா நமஸ்காரம்.

Wednesday, 27 October 2021

Ellaam Yesuvae எல்லாம் இயேசுவே


 


எல்லாம் இயேசுவே

எனக்கெல்லாம் இயேசுவே

தொல்லை மிகு இவ்வுலகில்

துணை இயேசுவே

 

1. ஆயனும் சகாயனும்

நேயனுமும் உ பாயனும்

நாயனும் எனக்கன்பான

ஞானமணவாளனும் --- எல்லாம்

 

2. தந்தை தாய் இனம்  ஜனம்

பந்துளோர் சிநேகிதர்

சந்தோட சகலயோக

சம்பூரண பாக்யமும் --- எல்லாம்

 

3. கவலையில் ஆறுதலும்

கங்குலிலென் ஜோதியும்

கஷ்ட நோய்ப் படுக்கையிலே

கை கண்ட  அவிழ்தமும் --- எல்லாம்

 

4. போதகப் பிதாவுமென்

போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடுங்

கூட்டாளியுமென் தோழனும் --- எல்லாம்

 

5. அணியும்  ஆபரணமும்

ஆஸ்தியும் சம்பாத்யமும்

பிணையாளியும் மீட்பருமென்

பிரிய மத்தியஸ்தனும் --- எல்லாம்

 

6. ஆன ஜீவ அப்பமும்

ஆவலுமென் காவலும்

ஞானகீதமும் சதுரும்

நாட்டமும் கொண்டாட்டமும் --- எல்லாம்


Aar Ivar Aaro ஆர் இவர் ஆரோ


 


ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ

1. ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ

2. ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ

3. கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றி வைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ

4. சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ