Tuesday, 22 June 2021

Theivathin sannithaanam தெய்வத்தின் சந்நிதானம்


 Deivathin Sanithaanam தெய்வத்தின் சந்நிதானம் என் உள்ளத்தின் ஆனந்தமே காருண்யமாம் அவர் சப்தம் என் காதுகளுக்கின்பமே 1. தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்தி தரும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை அனுதினம் வழி நடத்தும் 2. உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய்

Sunday, 20 June 2021

Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே


 Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன் 2. உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன் 3. உந்தன் சித்தம் நான் செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன் 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்யும் — தந்தேன் 5. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீஷர்க்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்

Saturday, 19 June 2021

Vanthiduveer Deva Vallamaiyaai வந்திடுவீர் தேவா வல்லமையாய்

 

Vanthiduveer Deva Vallamaiyaai

1. வந்திடுவீர் தேவா வல்லமையாய்

தந்திடும் எழுப்புதல் ஆவியினால்

சிந்தையில் மெல்கிசேதேக் முறைமை(2)

சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் (2)

 

ஊற்றிடுவீர் தேவ அன்பினையே

சுத்தர் உள்ளம் உயிர்த்திடவே

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2)

 

2. ஜீவனின் முடிவில்லாதவரே

தேவ குமாரனைப் போன்றவரே

சோதனையில் அழியாதெம்மையே (2)

சோர்ந்திடாதே நிலைக்க வருவீர் (2) – ஊற்றிடுவீர்

 

3.தந்தையும் தாயும் சகோதரரும்

சந்ததி எதுமில்லாதவர் நீர்

எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே (2)

ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில் (2) – ஊற்றிடுவீர்

 

4.தேவ குமாரனும் பாடுகளால்

ஜீவனை ஊற்றி கீழ்படிந்ததினால்

தாரணியில் அவர் போல் நிலைக்க (2)

தந்திடும் மெல்கிசேதேக் முறைமை (2) – ஊற்றிடுவீர்

 

5.நித்திய மான ஆசாரியரே

சத்திய வெளிப்படுத்துதல் நிறைவாய்

பெற்று நாம் நித்திய ஆசாரியராய் (2)

கர்த்தனாம் இயேசுவுடன் நிலைக்க (2) – ஊற்றிடுவீர்

Tuesday, 15 June 2021

Thivya Anbin Sathathai திவ்ய அன்பின் சத்தத்தை


Thivya Anbin Sathathai 
1.திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

2. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்

3. திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும்

4. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

Monday, 14 June 2021

Em Uyarntha Vaasasthalamathuve எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே


 Em Uyarntha Vaasasthalamathuve எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் – இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே பிதா முகம் காண்போம் 1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம் 2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே ஆ பேரின்ப ஆத்துமாவில் ஆனந்தங் கொள்வோம் 3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம் 4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம் பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர் பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம் 5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம் வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே 6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார் வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம் மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம் மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்

Saturday, 12 June 2021

Vaanamum Boomiyum Maaridinum வானமும் பூமியும் மாறிடினும்


Vanamum Boomiyum Maridinum
1. வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல் தேவனவர்
காத்திடுவார் தம்  கிருபையீந்தென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

2. கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ரோகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி

3. கிருபையின் காலம் முடிந்திடுமுன் 
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனாய் உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி

4. கிறிஸ்துவின் மரணசாயலிலே 
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி

5. வருகையின் நாள் நெருங்கிடுதே 
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் — கல்வாரி

Friday, 11 June 2021

Maa Thayave Deva Thayave மா தயவே தேவ தயவே


 Maa Thayave Deva Thayave மா தயவே தேவ தயவே மானிலத்தில் தேவை எனக்கே 1. வாக்களித்த வானபரன் வாக்கு மாறார் நம்பிடுவேன் நம்பினோரைக் கைவிடாரே நற்பாதமே சரணடைந்தேன் — மா 2. ஏசுவின் பொன் நாமத்தினால் ஏதென்கிலும் கேட்டிடினும் தம் சித்தம் போல் தந்திடுவார் தந்தையிவர் எந்தனுக்கே — மா 3. சத்துருக்கள் தூஷித்தாலும் சக்தியீந்தென் பட்சம் தந்திடுவார் ஆதரவே அளித்திடுவார் ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா 4. என்னில் ஏதும் பெலனில்லையே எந்தனுக்காய் இராப்பகலாய் நீதியுள்ள நேசர் இயேசு நிச்சயமாய் பரிந்துரைப்பார் — மா 5. தாய் வயிற்றில் இருந்த முதல் தமக்காய் என்னை தெரிந்தெடுத்தார் என் அழைப்பும் நிறைவேற எப்படியும் கிரியை செய்வார் — மா 6. தம் வருகை தரணியிலே தாமதமாய் நடந்திடினும் சார்ந்தவரை அனுதினமும் சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா