Saturday, 12 June 2021

Vaanamum Boomiyum Maaridinum வானமும் பூமியும் மாறிடினும்


Vanamum Boomiyum Maridinum
1. வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல் தேவனவர்
காத்திடுவார் தம்  கிருபையீந்தென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

2. கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ரோகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி

3. கிருபையின் காலம் முடிந்திடுமுன் 
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனாய் உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி

4. கிறிஸ்துவின் மரணசாயலிலே 
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி

5. வருகையின் நாள் நெருங்கிடுதே 
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் — கல்வாரி

Friday, 11 June 2021

Maa Thayave Deva Thayave மா தயவே தேவ தயவே


 Maa Thayave Deva Thayave மா தயவே தேவ தயவே மானிலத்தில் தேவை எனக்கே 1. வாக்களித்த வானபரன் வாக்கு மாறார் நம்பிடுவேன் நம்பினோரைக் கைவிடாரே நற்பாதமே சரணடைந்தேன் — மா 2. ஏசுவின் பொன் நாமத்தினால் ஏதென்கிலும் கேட்டிடினும் தம் சித்தம் போல் தந்திடுவார் தந்தையிவர் எந்தனுக்கே — மா 3. சத்துருக்கள் தூஷித்தாலும் சக்தியீந்தென் பட்சம் தந்திடுவார் ஆதரவே அளித்திடுவார் ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா 4. என்னில் ஏதும் பெலனில்லையே எந்தனுக்காய் இராப்பகலாய் நீதியுள்ள நேசர் இயேசு நிச்சயமாய் பரிந்துரைப்பார் — மா 5. தாய் வயிற்றில் இருந்த முதல் தமக்காய் என்னை தெரிந்தெடுத்தார் என் அழைப்பும் நிறைவேற எப்படியும் கிரியை செய்வார் — மா 6. தம் வருகை தரணியிலே தாமதமாய் நடந்திடினும் சார்ந்தவரை அனுதினமும் சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா

Thursday, 10 June 2021

Jebame En Vaalvin ஜெபமே என் வாழ்வின்


 Jebame En Vaalvin ஜெபமே என் வாழ்வின் செயலாக மாற ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே ஜெபமின்றியே ஜெயமில்லையே ஜெப சிந்தை எனில் தாருமே 1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம் இதயத்தின் பாரம் என்னிலும் தாரும் பொறுமையுடன் காத்திருந்தே போராடி ஜெபித்திடவே 2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க மாமிசத்தின் பெலவீனத்தில் ஆவியின் பெலன் தாருமே 3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும் பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும் துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல் உபவாசம் எனில் தாருமே 4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க உம் வருகை நாளதிலே உம்முடன் சேர்ந்திடவே

Wednesday, 9 June 2021

Oppuvithen Iyane ஒப்புவித்தேன் ஐயனே


  Oppuvithen Iyane ஒப்புவித்தேன் ஐயனே உம்சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே 1. சுட்டெரிக்கும் அக்கினியால் சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே ஆவி ஆத்மா சரீரமே ஆத்தும நேசரே படைக்கிறேன் 2. கண்ணீர் கவலை பெருகுதே கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே உலக சிநேகம் பின்னே வைத்தே உறுதியாய் பின் சென்றிட 3. அத்திமரம் துளிர் விடாமல் ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும் கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா தூய கிருபை தந்தருளும் 4. எந்தனின் சிந்தை முன்னறிவீர் எந்தனின் பாதை நீரறிவீர் நல்ல பாதை நடந்திட நாதனே என்னையும் அர்ப்பணித்தேன் 5. காடு மலைகள் போன்ற இடம் கண்டு என்றும் அஞ்சிடாமல் அழியும் ஆத்ம தரிசனம் ஆண்டவா என்னிலே ஈந்தருளும் 6. சோதனை எம்மை சூழ்ந்திடினும் சோர்ந்திடா உள்ளம் தந்தருளும் ஜீவகிரீடம் முன்னே வைத்தே ஜீவிய காலம் நடந்திட

Tuesday, 8 June 2021

Karthaave Nangal கர்த்தாவே நாங்கள்


   Karthaave Nangal
1. கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில்
மெய்ஞ் ஞானமற்ற மாந்தர்
நீர் புத்தியைத் தராவிடில்
எப்போதும் புத்தியீனர்
உம்மால் உண்டான வேதமும்
நீர் ஈயும் தூய ஆவியும்
நற்பாதை காட்டவேண்டும்.

2.  வேதத்துக்காக ஸ்தோத்திரம்
உமக்குண்டாவதாக
தெய்வீக வார்த்தையைத் தினம்
எல்லாரும் பக்தியாக
ஆராய்ந்து பார்த்துச் சிந்தித்து
கைக்கொள்ள நீர் கடாட்சித்து
நல்லாவியை அளியும்.

3.  பிதாவே எங்கும் உமது
நல் வார்த்தை செல்வதாக
ஆ யேசுவே நீர் காட்டிய
வழியில் போவோமாக
தேவாவி எங்கள் உள்ளத்தில்
இறங்கி வேதத்தால் அதில்
நற்சீர் அளிப்பீராக

Monday, 7 June 2021

Yesu En Asthiparam இயேசு என் அஸ்திபாரம்

 

Yesu En Asthiparam இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன்யானும் 1. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும் அஞ்சிடேன் இவையை என் தஞ்சம்யேசு இருக்கையில் 3. பாவத்தால் என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார்

Sunday, 6 June 2021

Deva Sitham Niraivera தேவ சித்தம் நிறைவேற


 Deva Sitham Niraivera
தேவ சித்தம் நிறைவேற
எனையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம்
பலமாக தொனிக்குதே

1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

2. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேனென்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்

3. அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்

4. நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்

5. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று  நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

6. சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையுமுள்ளவனே
ஜீவ கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்

7. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்