Sunday 9 May 2021

Visuvasame Nam Jeyame விசுவாசமே நம் ஜெயமே


 Visuvasame Nam Jeyame விசுவாசமே நம் ஜெயமே விலை மதியாதோர் நல் பொக்கிஷமே விசுவாசமாம் கேடகம் தாங்கி விசுவாச பாதையில் முன்னேறுவோம் 1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும் மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி வருத்தம் போராட்டம் வந்தும் விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம் 2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும் விசுவாசத்தாலே முன்னேறியே நாம் வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம் 3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை விசுவாச வீரர்கள் இழந்தனரே நல்ல போராட்டம் போராடியே நாம் விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வோம் 4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும் திடமான மனதுடன் நிலைத்திருப்போம் வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம் பின் செல்லுவோம் 5. பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம் இயேசுவை நோக்கி சீராக ஓடி விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்

Friday 7 May 2021

Seeonile En Thida சீயோனிலே என் திட


 Seeonile En Thida
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)

1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ 
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே 
அசையா என் நம்பிக்கை நங்கூரமே 
இயேசுவில் மாத்திரமே 

2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் 
எனக்கு எட்டாத உயரத்திலே 
எடுத்தவர் நிறுத்திடுவார்

3.வியாதியினாலே காயம் வருந்தி 
வாடியே மரண நிழல் சூழினும் 
விசுவாசத்தின் கரத்தாலவர் 
வாக்கை நான் பற்றிடுவேன் 

4.மா பரிசுத்த விசுவாசத்தாலே 
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால் 
திறந்தாரே தூய வழி 

5. நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவுவரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே

Thursday 6 May 2021

Naan Pavasetrinile நான் பாவச் சேற்றினிலே


 Naan Pavasetrinile 1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2. என் ஜென்ம கரும பாவங்கள் எல்லாம் தொலைத்தாரே மன்னித்து என்றும் மறந்து விட்டாரே மா பரமானந்தம் 3. என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே 4. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம் தூக்கி எறிந்தாரே 5. இரத்தாம்பரம் பொன் சிவப்பான இதய பாவங்களை பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார் 6. மேற்கு திசைக்கும் கிழக்குக்கும் மா எண்ணிலா தூரம் எந்தன் பாவங்கள் அத்தனை தூரம் இயேசு விலக்கினார் 7. நான் ஜலத்தினால் நல் ஆவியினால் நான் மறுபடியும் பிறந்தேன் தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக தேடிக்கொண்டேன் பாக்யம் 8. அங்கேயும் சீயோன் மலைமீதே ஆனந்தக் கீதங்களே ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ அன்பரைப் பாடிடுவேன்

Tuesday 4 May 2021

En Devan En Belane என் தேவன் என் பெலனே


 En Devan En Belane

என் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே 1. தீங்கு நாளில் என்னை அவர் தம் கூடார மறைவினில் காத்திடுவார் தகுந்த வேளை தம் கரத்தால் கன்மலை மேலாய் உயர்த்திடுவார் -என் தேவன் 2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன் அதையே அவரிடம் நாடிடுவேன் அவரின் முகமதை நான் காண அவரில் என்றும் நிலைத்திருப்பேன் -என் தேவன் 3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால் அவரால் இருதயம் ஸ்திரப்படுமே திட மனதோடு காத்திருந்தே அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே -என் தேவன்

Saturday 1 May 2021

Kadal Konthalithu கடல் கொந்தளித்து


 Kadal Konthalithu

1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில் எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்

Vali Nadathum வழி நடத்தும்


 Vali Nadathum

வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே 1. பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே செல்வோம் பரமன் நாட்டிற்கே இயேசு பரன் தம் வீட்டினிற்கே 2. போகும் வழியைக் காட்டி நல்ல போதனை செய்வார் – ஏகும் சுத்தர் மீது கண்கள் இருத்தி நடத்துவார் இயேசு திருத்தி நடத்துவார் 3. அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே – சொந்தமான தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே இயேசு துணையாய் நிற்பாரே 4. வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும் – பாதையில் நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார் இயேசு திடப்படுத்திடுவார் 5. காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம் – பாடானாலும் பாடிச் செல்வோம் பரவசமுடனே இயேசு பரன் தான் நம்முடனே 6. அன்றன்றுள்ள தேவை தந்து ஆதரிப்பாரே – என்றென்றும் துதிகனமும் மகிமையவர்க்கே இயேசு மகிபனாமவர்க்கே

Wednesday 28 April 2021

Rajavaai Yesu இராஜாவாய் இயேசு


 Rajavaai Yesu

1. இராஜாவாய் இயேசு தூதர்கள் சூழ மேகமதில் தோன்றும் நாள் வேகமாய் நெருங்கி வந்திடுதே நாம் ஏகமாய் எழும்புவோம் பரிசுத்தமாக்கப் பட்டோரே ஒன்றாய் பறந்து வந்திடுவீர் பாவமில்லாமலே காத்திடும் நமக்காய் பரன் இயேசு வந்திடுவார் 2. கர்த்தருக்குள்ளே நித்திரையானோர் காகளம் தொனிக்கவே கண்ணிமைப் பொழுதில் கல்லறையில் நின்று வல்லமையாய் வருவார் --- பரிசுத்த 3. காயங்கள் கண்டு ஆனந்தத்தாலே கண்ணீர் சொரிந்திடுவோம் காலா காலங்களாய் கல்வாரி நேசத்தை கருத்தாய்ப் பாடிடுவோம் --- பரிசுத்த 4. ஜீவ கிரீடம் சூடிடுவோமே ஜீவனை ஊற்றியே நாம் தேவ சித்தமே செய்தோர் பெறவே ஜெயவேந்தனாய் வருவார் --- பரிசுத்த