Saturday 1 May 2021

Kadal Konthalithu கடல் கொந்தளித்து


 Kadal Konthalithu

1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில் எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்

Vali Nadathum வழி நடத்தும்


 Vali Nadathum

வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே 1. பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே செல்வோம் பரமன் நாட்டிற்கே இயேசு பரன் தம் வீட்டினிற்கே 2. போகும் வழியைக் காட்டி நல்ல போதனை செய்வார் – ஏகும் சுத்தர் மீது கண்கள் இருத்தி நடத்துவார் இயேசு திருத்தி நடத்துவார் 3. அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே – சொந்தமான தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே இயேசு துணையாய் நிற்பாரே 4. வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும் – பாதையில் நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார் இயேசு திடப்படுத்திடுவார் 5. காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம் – பாடானாலும் பாடிச் செல்வோம் பரவசமுடனே இயேசு பரன் தான் நம்முடனே 6. அன்றன்றுள்ள தேவை தந்து ஆதரிப்பாரே – என்றென்றும் துதிகனமும் மகிமையவர்க்கே இயேசு மகிபனாமவர்க்கே

Wednesday 28 April 2021

Rajavaai Yesu இராஜாவாய் இயேசு


 Rajavaai Yesu

1. இராஜாவாய் இயேசு தூதர்கள் சூழ மேகமதில் தோன்றும் நாள் வேகமாய் நெருங்கி வந்திடுதே நாம் ஏகமாய் எழும்புவோம் பரிசுத்தமாக்கப் பட்டோரே ஒன்றாய் பறந்து வந்திடுவீர் பாவமில்லாமலே காத்திடும் நமக்காய் பரன் இயேசு வந்திடுவார் 2. கர்த்தருக்குள்ளே நித்திரையானோர் காகளம் தொனிக்கவே கண்ணிமைப் பொழுதில் கல்லறையில் நின்று வல்லமையாய் வருவார் --- பரிசுத்த 3. காயங்கள் கண்டு ஆனந்தத்தாலே கண்ணீர் சொரிந்திடுவோம் காலா காலங்களாய் கல்வாரி நேசத்தை கருத்தாய்ப் பாடிடுவோம் --- பரிசுத்த 4. ஜீவ கிரீடம் சூடிடுவோமே ஜீவனை ஊற்றியே நாம் தேவ சித்தமே செய்தோர் பெறவே ஜெயவேந்தனாய் வருவார் --- பரிசுத்த

Saturday 24 April 2021

Vinn Magimai விண்மகிமை


 Vinn Magimai

விண்மகிமை கண்முன் கண்டேன் விண் மன்னன் ஏசென்னை அழைக்கின்றார் மண்ணுலகின்பங்கள் மாயையல்லோ வீணானதே மாறிடுதே விண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே (2) 1. மரண யோர்தான் புரண்டு வந்தால் மாலுமி ஏசுவின் கப்பல் ஏறி அக்கரையோரம் நான் சென்றிடுவேன் அங்கே வரவேற்புக் காத்திருக்கும் -- விண் 2. பரதீஸிலே பல காட்சிகள் பார்த்துப் பரவசம் பொங்கிடுமே கண்ணீர் கவலையும் அங்கில்லையே கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் -- விண் 3. ஜீவ ஜல நதி ஓடிடும் ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும் கர்த்தரின் கை கோர்த்து நடந்திட காத்து தவிக்கின்ற தென்னுள்ளமே -- விண் 4. புதிய கனி புசித்திடுவேன் பூக்கள் நடுவே உலாவிடுவேன் தூதர்கள் பக்தர்களோடு வாழும் தூய பேரின்பத்தை நாடுகிறேன் -- விண் 5. நல்ல சுகம் ஆரோக்கியமும் நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே தேவ சமூக இளைப்பாறுதல் தேவை அதை நாடி கண்டடைவேன் -- விண் 6. எத்தனையோ பிரதி பலன்கள் உத்தம ஊழியர் பெற்றிடவே ஓட்டம் ஜெயத்தோடு முடிந்திடும் ஒன்றே எனதாவல் ஏசு போதும் – விண்

Thursday 22 April 2021

Aachariyame Athisayame ஆச்சரியமே அதிசயமே


 Aachariyame Athisayame

ஆச்சரியமே அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக சொந்த ஜனங்களை நடத்தினாரே இஸ்ரவேலின் துதிகளாலே ஈன எரிகோ வீழ்ந்ததுவே 2. ஏழு மடங்கு எரி நெருப்பில் ஏழை தம் தாசருடன் நடந்தார் தானியேலை சிங்கக் கெபியில் தூதன் துணையாய் காத்தனரே 3. பனிமழையை நிறுத்தினாரே பக்தன் எலியா தன் வாக்கினாலே யோசுவாவின் வார்த்தையாலே ஏகும் சூரியன் நின்றதுவே 4. மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும் மாபெலன் தேவனிடம் அடைந்தான் வீழ்த்தினானே கோலியாத்தை வீரன் தாவீது கல் எறிந்தே 5. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி நம்மை ஆதரிப்பார்

Sunday 18 April 2021

Ungalai Padaithavar உங்களைப் படைத்தவர்


 

1. உங்களைப் படைத்தவர்

சருவ தயாபரர்

தம்மில் வாழ்ந்து ஜீவிக்க

என்றும் தம்மோடிருக்க

ஆசைப்பட்டோர் உங்களைப்

பார்த்து என் சிநேகத்தை

தள்ளிவிட்டு நிற்பதார்

திரும்புங்கள் என்கிறார்.

 

2. உங்களை ரட்சித்தவர்

தெய்வ சுதனானவர்

திரு ரத்தம் சிந்தினார்

சிலுவையில் மரித்தார்

நீங்கள் வீணில் சாவதேன்

மரித்துங்களை மீட்டேன்

என்று கூறி நிற்கிறார்

திரும்புங்கள் என்கிறார்.

 

3. உங்களை நேசிப்பவர்

தூய ஆவியானவர்

நயம் பயம் காட்டினார்

குணப்பட ஏவினார்

தயை பெற வாரீரோ

மீட்பைத் தேடமாட்டீரோ

என்றிரங்கிக் கேட்கிறார்

திரும்புங்கள் என்கிறார்.

 

Thagam Theerkum jeevanathi தாகம் தீர்க்கும் ஜீவநதி


 Thagam Theerkum jeevanathi

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் 1. அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே 2. கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் 3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான் ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றேன் புன்னகை பூத்து புனிதனும் மறைய புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே 5. மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை என் நேசரேசுவை வாழ்த்துகிறேன்