Friday, 22 January 2021

Inimai Inimai இனிமை இனிமை


 Inimai Inimai

இனிமை இனிமை இது இனிமை மகிமை மகிமை புது மகிமை இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால் இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3 1. காலையும் மாலையும் புது கிருபை கண்ணின் மணிபோல காக்கும் கிருபை இறுதிவரைக்கும் வரும் கிருபை நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை 2. மலைகள் விலகினாலும் மாறா கிருபை மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும் பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை 3. அனாதி சினேகத்தால் வந்த கிருபை ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை அழகிய தேவகுமாரன் இயேசு அளித்திட்ட அதிசயமான கிருபை 4. வனாந்தர வழிதனில் வந்த கிருபை வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை வல்லமையுள்ள தேவனின் ஆவி வரம் தந்து காத்திட்ட தேவகிருபை

Thursday, 21 January 2021

Rajareega kempeera Thoniyode ராஜரீக கெம்பீர தொனியோடே


 Rajareega kempeera Thoniyode

1. ராஜரீக கெம்பீர தொனியோடே ராஜ ராஜனை தேவ தேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக ஏசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 2. சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள் - மெய் சீஷராக 3. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள் தளர்ந்திடவே அடங்கிடவே பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும் பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் - மெய் சீஷராக 4. ஜெபமே எமது அஸ்திபாரமே ஜெபமின்றியே ஜெயமில்லையே ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் ஆச்சரியமாகவே நடத்துவார் - மெய் சீஷராக 5. செங்கடல் நடுவிலே நடத்தினார் எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர் கடலை பிளந்து நதியைப் பிரித்து காய்ந்து நிற்கும் பூமியிலே நடத்துவார்- மெய் சீஷராக 6. பரலோகவாசிகள் சுதேசிகள் பரதேசிகள் சில சீஷர்கள் பின்திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல் பற்றும் விசுவாசத்தோடு முன்செல்வோம் - மெய் சீஷராக 7. குணசாலிகள் கூடாரவாசிகள் கூட்டமாகவே கூடிச்சேரவே மணவாளனை நம் மன்னன் இயேசுவை தம் மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் - மெய் சீஷராக

Wednesday, 20 January 2021

Mangala Geethangal Padiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்


 Mangala Geethangal Padiduvom

1. மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கறை திரை நீக்கி திருச்சபையாக்கி காத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் 2. ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே ராஜாதி ராஜன் இயேசுவோடே இன ஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து சென்றிடுவோம் 3. சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாக புறப்படுவோம் 4. ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே அவர் மணவாட்டி ஆக்கினாரே விருந்தறை நேச கொடி ஒளி வீச வீற்றிருப்போம் சிங்காசனத்தில் 5. தந்தத்தினால் செய்த மாளிகையில் தயாபரன் இயேசு புறப்பாடுவார் மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர் மன்னன் மணாளன் வந்திடுவர்

Yesuvin Namam Onkidave இயேசுவின் நாமம் ஓங்கிடவே


 Yesuvin Namam Onkidave

இயேசுவின் நாமம் ஓங்கிடவே நேசமுடன் புகழ் பாடிடுவோம் காசினியில் நிகர் வேறதற்கில்லை தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம் வானமும் பூமியும் யாவையுமே வார்த்தையினால் உண்டாக்கினவர் என்னை மண்ணென்று நினைவாக்கினவர் எனக்கென்றும் சொந்தமவர் 1. அற்புதமாம் அதிசயமாம் ஆண்டவர் இயேசுவின் நாமமதே பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் நல் பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே 2. வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர் வாழ்த்தி வணங்கிடும் நாமமதே மானிடரின் முழங்கால் முடங்கும் மெய் மேன்மை உயர் திரு நாமமதே 3. சாவு பயங்கள் நீங்கிடவே சத்துருமேல் ஜெயம் பெற்றிடவே சோதனையில் பல வேதனையில் என் சொந்த அடைக்கல நாமமதே 4. வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே நீடுழியாய் நித்ய ராஜ்யத்திலே -தம் நாமமதை நான் போற்றிடுவேன்

Monday, 18 January 2021

Potriduven Paraparanai போற்றிடுவேன் பராபரனை


 Potriduven Paraparanai

போற்றிடுவேன் பராபரனை சாற்றிடுவேன் சர்வவல்லவரை ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் என்றும் பாடுவேன் ஆ ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன் கண்மணி போல் கருத்துடனே கைவிடாமல் என்னைக் காத்தனரே 1. எத்தனையோ பல நன்மைகள் இத்தனை ஆண்டுகளாய் அளித்தார் கர்த்தரே நல்லவர் என்பதையே கருத்துடனே ருசித்திடுவேன் 2. பயப்படாதே என்றுரைத்தனரே பரிசுத்த ஆவியானவரே வெள்ளம் போல் சத்துரு வந்திடினும் விரைந்தவரே கொடியேற்றினார் 3. பொருத்தனைகள் துதி பலிகள் பணிவுடன் செலுத்தி ஜெபித்திடுவேன் ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன் ஆண்டவரே செவி கொடுப்பார் 4. நித்தமும் போதித்து நடத்தி நித்திய ஆலோசனை அளிப்பார் முடிவிலே மகிமையில் சேர்த்திடுவார் மகிழ்ந்திடுவேன் நித்தியமாய்

Sunday, 17 January 2021

Theevinai Seiyathe தீவினை செய்யாதே


 Theevinai Seiyathe

1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் ஆற்றித் தேற்றியே காப்பார் நித்தம் உதவி செய்வார் மீட்பர் பெலனை ஈவார் ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

Friday, 15 January 2021

Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா


 Sthothiram Yesu Natha

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் 2. வான துதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் மன்னவனே உமக்கு 3. இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் 4. நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவப் புது வழியாம் நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம் 5. இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்கூட உம் நாமத்தினால் தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே 6. நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே