Wednesday 2 December 2020

Paduven Paravasam Aguven பாடுவேன் பரவசமாகுவேன்


 Paduven Paravasam Aguven

பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே 1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2.என்று மாறும் எந்தன் துயரம் என்றே மனமும் ஏங்கையில் மாராவின் கசப்பை மதுரமுமாக்கி மகிழ்வித்த மகிபனையே 3.ஒன்றுமில்லாத வெறுமை நிலையில் உதவுவாரற்றுப் போகையில் கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து தாகம் தீர்த்த தயவை 4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி பட்டினி சஞ்சலம் நேர்கையில் வானமன்னாவால் ஞானமாய் போஷித்த காணாத மன்னா இயேசுவை

Tuesday 1 December 2020

Karthar Kirubai Entrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது


 Karthar Kirubai Entrumullathu

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்றென்றும் மாறாதது ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே (2) கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மையுள்ளவர் 1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தைப் பிடித்து நடத்தினாரே தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே 2. வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே 3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே 4.கண்ணீர் கவலை யாவையும் போக்க கர்த்தர் இயேசு வருகின்றாரே கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் அவரோடு நாமும் பறந்து செல்வோம்

Yesuve Enthan Nesare இயேசுவே எந்தன் நேசரே


 Yesuve Enthan Nesare

இயேசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றிப் பாடுவேன் 1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா (2) எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை என்றும் நீரே அல்லவா (2) 2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா (2) எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் நாயகா (2)

Sunday 29 November 2020

Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை

 

Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை என்றென்றும் பாடிடுவோம் அவர் உயர்ந்த நாமமதை ஒருமித்து உயர்த்திடுவோம் 1. சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே சபையாய் நம்மை அழைத்தாரே சாற்றிடுவோம் நம் துதியினையே சர்வ வல்லவராம் இயேசுவுக்கே 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து சேதமின்றி நம்மை காத்தாரே பூரிப்புடனே நாம் பாடிடுவோம் புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் 3. மரண இருளில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் 4. ஜெயத்தின் கீதங்கள் பாடிடுவோம் ஜெயமும் முழங்க துதித்திடுவோம் அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே அல்லும் பகலிலும் பாடிடுவோம் 5. பொன்னிலும் விலையேறப் பெற்றதான நல் விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம் மாற்றுவார் சாயலை அந்நாளிலே மாண்புடனே அவர் மகிமையிலே

Friday 27 November 2020

Idhuvarai Seidha Seyalgalukkaaga இதுவரை செய்த செயல்களுக்காக


 Idhuvarai Seidha Seyalgalukkaaga

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2) 1. உவர் நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் (2) நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) 2. தனி மரமாக இருந்த என்னை கனி மரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் (2) இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும் (2) தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Thursday 26 November 2020

Aayiram Sthothiramae ஆயிரம் ஸ்தோத்திரமே


 Aayiram Sthothiramae

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே பள்ளத்தாக்கிலே அவர் லீலி சாரோனிலே ஓர் ரோஜா 1. வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன் ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது இயேசுவின் அன்பினாலே 2. உலக மேன்மை யாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன் சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே சாத்தானை முறியடிப்பேன் 3. சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும் ஆவியில் மகிழ்ந்திடுவேன் 4. பலவித சோதனையை சந்தோஷமாய் நினைப்பேன் எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்ப்படுத்தி விசுவாசத்தில் வளர்வேன் 5. இயேசுவின் நாமத்திலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும் என்றென்றும் உம்மில் வாழ

Wednesday 25 November 2020

Sthotharipen Sthotharipen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


 Sthotharipen Sthotharipen

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 5. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்