Oru Varthai Sollum
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
Anathi Devan Un Adaikalame
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த
2. கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே --- இந்த
3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் --- இந்த
4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த
5. ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த
En Thevan En Velicham
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார்
என்னை அவர் நிழலில்
வைத்து காத்திடுவார் கன்மலை
மேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து
என்னைக் காத்து நின்றார் என்னை
பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே – என்
Vananthira Yatherayil
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் (2)
என் வாழ்வு செழித்திடுமே
1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர
2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர
3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கொன்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர
Unnathamanavarin
1.உன்னதமானவரின் உயர்
மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
அவர் செட்டையின் கீழ்
அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே
3. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும் – இருளில்
நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன்
4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன்பக்கம் விழுந்தாலும் – அது
ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே
5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்
6. உன் வழிகளிளெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவர்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவர்
7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்
8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்
Neerintri Vaalvethu Iraiva
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2)
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே (2)
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே (2) — நீரின்றி
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா (2)
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா (2) — நீரின்றி
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் (2)
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா (2) — நீரின்றி