Aagamangal Pugaz 1. ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குரு நாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ --- அருரூபா 2. மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ --- மனுவேலா 3. நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ --- நரதேவா 4. ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ --- இறையோனே 5. அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராபர சீலா நமோ நமோ --- அருளாளா 6. பொறிவினை யுறாத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ --- புதுவேதா 7. நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணோனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ --- நெறிநீதா 8. இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பாறைகள்பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய நாதா நமோ நமோ --- இறையோனே
Tuesday, 2 June 2020
Aagamangal Pugaz ஆகமங்கள் புகழ்

Saturday, 30 May 2020
Neer Thantha Nanmai Yavaiyum நீர் தந்த நன்மை யாவையும்
Friday, 29 May 2020
Paavikkai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு
Paavikkai Maritha Yesu 1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா (3) கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு (3) மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் (3) தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா (3) வல்ல வேந்தே, வந்திடும்.
Thursday, 28 May 2020
Immanuvele Vaarum Vaarume இம்மானுவேலே வாரும் வாருமே
Immanuvele Vaarum Vaarume 1. இம்மானுவேலே வாரும் வாருமே மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித்தவிக்கும் மகிழ் மகிழ் சீயோனின் சபையே இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த்துளிரே வாருமே பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ வாருமே வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே மந்தார ராவின் மேகம் நீக்கிடும் இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4. தாவீதின் திறவுகோலே, வாருமே விண் வாசலைத் திறந்து தாருமே ஒடுக்கமாம் நல் வழி காத்திடும் விசாலமாம் துர்ப்பாதை தூர்த்திடும். 5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும் முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.
Wednesday, 27 May 2020
Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் 1. பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம் 3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா பூத கணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார் – ஆ ஆ கீதம் 4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகிறார் ஜெயவீரன் - நம் மேள வாத்தியம் கை மணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம் – ஆ ஆ கீதம்
Gnana Naatha vanam Boomi ஞான நாதா வானம் பூமி
Gnana Naatha vanam Boomi 1. ஞான நாதா வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர் 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும் 3. நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம் வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம் சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று, ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்
Monday, 25 May 2020
Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும் மா நேச கர்த்தரே
Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் சகாயம் அற்றபோதிலும் நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் கண் கண்ட யாவும் மாறி வாடிடும் மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும் நீர் பாவி நேசரே என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும் பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன் நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும் நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும் சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Subscribe to:
Posts (Atom)