Sunday, 22 December 2019

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம்

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 1. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Vinnil Oor Natchathiram Thontridave விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

Vinnil Oor Natchathiram 1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 2. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க 1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 3. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் – பிறந்தார்

Saturday, 21 December 2019

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே --- தேவ பாலன் 1.மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன் 2.பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தரே பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன்

Friday, 20 December 2019

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுமே (2) 1. பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார் நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் அவர் பாதம் பணிந்திடுவோம் – வான் 3. இந்த மாடடை தொழுவத்திலே அவர் மானிடனாய் பிறந்தார் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்

Eerayiram Aandugal Mun ஈராயிம் ஆண்டுகள் முன்

Eerayiram Aandugal Mun 1.ஈராயிம் ஆண்டுகள் முன் மரியாளின் நன் மகனாய் தெய்வ மைந்தன் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள் பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் எக்காளம் முழங்க தூதர் சேனை பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் 2.ராக்கால மந்தை மேய்ப்பர்கள் காக்க பேரொளி தோன்றினது தூதர்கள் கூட்டம் முழங்கின பாடல் தூரத்தில் கேட்டது 3.யோசேப்பும் மரியாளும் ஒன்றாய் பெத்தலகேம் ஊர் வந்தனர் பிள்ளையை கிடத்த இடமில்லை தேவ மைந்தனுக்கிடமில்லை 4.பெத்தலகேம் சத்திர முன்னனை மாட்டு தொழுவத்திலே பிறந்தார் மரியாளின் மகனாய் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார்

Wednesday, 18 December 2019

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடு என்னை மீட்ட இயேசு ராஜன் என்னை ஆளவே வருவார் 1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி 2.உலகில் நடப்பவை எல்லாம் அவர் வருகைக்கு உண்மையைக் கூறும் அவர் வருகை மிகவும் சமீபம் அவர் வரவை சந்திக்க ஆயத்தமா 3.வானில் ஓர் பேரொளி தோன்றும் விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும் மேற்கும் கிழக்கும் நடுங்க மேகங்கள் மீதே வருவார்