Tuesday, 3 December 2019

Rajan Thaveethurillulla ராஜன் தாவீதூரிலுள்ள


Rajan Thaveethurillulla 1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே மாதா, மரியம்மாள்தான் பாலன் இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார் மா கர்த்தாதி கர்த்தரே அவர் வீடோ மாட்டுக் கொட்டில் தொட்டிலோ முன்னணையே ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார் பால்ய பர்வம் எல்லாம் அன்பாய் பெற்றோர்க்கு அடங்கினார் அவர்போல் கீழ்ப்படிவோம் சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்ட பாலனாக வளர்ந்தார் பலவீன மாந்தன் போல துன்பம் துக்கம் சகித்தார் இன்ப துன்ப நாளிலும் துணை செய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மை கண்ணால் கண்டு களிப்போம் அவர் தாமே மோட்ச லோக நாதர் என்று அறிவோம் பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே 6. மாட்டுத் தொழுவத்திலல்ல தெய்வ ஆசனத்திலும் ஏழைக் கோலமாக அல்ல ராஜ கிரீடம் சூடியும் மீட்பர் வீற்றிருக்கின்றார் பாலர் சூழ்ந்து போற்றுவார்

Monday, 2 December 2019

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1.ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய் அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் --- மானிட 2.கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய ரத்தம் பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி --- மானிட 3.இயேசுவின் நாமத்தில் வல்லமையே இதை நாடுவோர்க்கு விடுதலையே துன்ப கட்டுகள் காவல் சிறைகள் இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா --- மானிட 4.அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார் அதிசயங்கள் அவர் காட்டிடுவார் உண்மை நிறைந்த உள்ளம் திறந்து உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் --- மானிட 5.கர்த்தர் உன்னை இனி கைவிடாரே கடைசி வரை தளராதே நம்பு என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர் இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் --- மானிட

Sunday, 1 December 2019

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை. 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் 4. இயேசுவே, வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம்பீரித்து பெத்லேகேமில் கூடுங்கள் ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவே லோகம் ஆளும் நாதரே ஏற்ற காலம் தோன்றினீர் கன்னியிடம் பிறந்தீர் வாழ்க நர தெய்வமே அருள் அவதாரமே நீர் இம்மானுவேல் அன்பாய் பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவே வாழ்க நீதி சூரியனே மீட்பராக வந்தவர் ஒளி ஜீவன் தந்தவர் மகிமையை வெறுத்து ஏழைக்கோலம் எடுத்து சாவை வெல்லப் பிறந்தீர் மறு ஜென்மம் அளித்தீர்

Saturday, 30 November 2019

Paathai Kaatum Maa Yegovaa பாதை காட்டும் மாயெகோவா

Paathai Kaatum Maa Yegovaa 1. பாதை காட்டும், மாயெகோவா பரதேசியான நான் பலவீனன், அறிவீனன், இவ்வுலகம் காடுதான்; வானாகாரம் வானாகாரம் தந்து என்னைப் போஷியும். 2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை, நீர் திறந்து தாருமேன்; தீப மேக ஸ்தம்பம் காட்டும், வழியில் நடத்துமேன்; வல்ல மீட்பர் வல்ல மீட்பர் என்னைத் தாங்கும், இயேசுவே. 3. சாவின் அந்தகாரம் வந்து, என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றி தந்து, என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில் கீத வாழ்த்தல் கீத வாழ்த்தல் உமக்கென்றும் பாடுவேன்

Nal Meetper Patcham Nillum நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetper Patcham Nillum 1. நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார் 2. நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால் போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன் பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன் 3. நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும் சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர் 4. நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார் விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

Friday, 29 November 2019

Yesuvodu Sernthirupathenna Pakiam இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்

Yesuvodu Sernthirupathenna Pakiam 1.இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம் இயேசுவிற்காய் ஜீவிப்பதோர் என்ன ஆனந்தம் ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே 2. போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால் நீக்கினார் என் சாபமெல்லாம் தாம் சுமந்ததால் எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகுதே மன்னவா உம் கூட வாழ என்று கூடுமோ --- இயேசு 3. மாட்சி மிகும் நாட்டிலே நான் வாசஞ் செய்திட மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க கைகளால் கட்டிடாதோர் நித்திய ராஜ்யமே கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே --- இயேசு 4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம் அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே --- இயேசு 5. நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே அல்லல் தீர்க்க என்று வாரீர் ஆத்ம நேசரே எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட --- இயேசு