Paathai Kaatum Maa Yegovaa
1. பாதை காட்டும், மாயெகோவா
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம் வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.
2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர் வல்ல மீட்பர்
என்னைத் தாங்கும், இயேசுவே.
3. சாவின் அந்தகாரம் வந்து,
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல் கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்
Yesuvodu Sernthirupathenna Pakiam
1.இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்
இயேசுவிற்காய் ஜீவிப்பதோர் என்ன ஆனந்தம்
ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே
ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே
2. போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால்
நீக்கினார் என் சாபமெல்லாம் தாம் சுமந்ததால்
எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகுதே
மன்னவா உம் கூட வாழ என்று கூடுமோ --- இயேசு
3. மாட்சி மிகும் நாட்டிலே நான் வாசஞ் செய்திட
மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க
கைகளால் கட்டிடாதோர் நித்திய ராஜ்யமே
கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே --- இயேசு
4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே
அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம்
அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே
என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே --- இயேசு
5. நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே
அல்லல் தீர்க்க என்று வாரீர் ஆத்ம நேசரே
எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி
அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட --- இயேசு