Tuesday, 22 October 2019

Sathya Vethamana vithai சத்ய வேதமான விதை

Sathya Vethamana vithai
1.     சத்ய வேதமான
  காலை மாலை
விதைப்போம் எப்போதும்
ஓய்வில்லாமலே,
அறுப்பின் நற்காலம்
எதிர் நோக்குவோமே,
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே

அரிக்கட்டோடே
அரிக்கட்டோடே
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

2. மழையடித்தாலும்
வெயிலெரித்தாலும்
குளிர்ச்சியானாலும்
வேலை செய்வோமே;
நல்ல பலன் காண்போம்,
துன்பம் மாறிப்போகும்
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

3. கவலை, விசாரம்;
கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை
விடமாட்டோமே
இளைப்பாறக் கர்த்தர்
நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

Saturday, 19 October 2019

Kalvariyin karunaiyithae கல்வாரியின் கருணையிதே

Kalvariyin karunaiyithae
1.கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

2.பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே  --- விலையேறப்

3.சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே  --- விலையேறப்

4.எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்   --- விலையேறப்

5.மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே   --- விலையேறப்

Friday, 18 October 2019

Paviku Pugalidam Yesu Ratchagar பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

Paviku Pugalidam Yesu Ratchagar
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Thursday, 17 October 2019

Yesuvin Marbinil Saruvene இயேசுவின் மார்பினில் சாருவேனே

Yesuvin Marbinil Saruvene
இயேசுவின் மார்பினில் – சாருவேனே (3)
துன்பம் துக்கம் கண்ணீர் - மறப்பேனே  (3)
 
1. காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
அன்பின் சொரூபி என் இயேசு நாதா
 
2. நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
 
3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடீ சூட்டியே நின் சிரசில்
 
4. ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை

Wednesday, 16 October 2019

Ullamellam Uruguthaiyo உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை

Antho Kalvariyil Arumai
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார் (2)

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ

Arasanai Kanamalirupomo
அரசனைக் காணாமலிருப்போமோ – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத – அரசனைக்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத – அரசனைக்

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே – யூத – அரசனைக்

3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத – அரசனைக்

4. அரமனையில் அவரைக் காணோமே – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு, அதோ பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார் – யூத – அரசனைக்

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமி்ட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத – அரசனைக்