Thursday, 10 October 2019

Hosanna Palar Paadum Rajavaam ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம்

Hosanna Palar Paadum Rajavaam
ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே

1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

Tuesday, 8 October 2019

En Nesare En Aathma Nayagare என் நேசரே என் ஆத்ம நாயகரே

En Nesare En Aathma Nayagare
என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்
என் கண்ணீர் துடைத்திடவே உம்மில் நான் சேர்ந்திடவே
என் இயேசுவே மத்ய வானில் வேகம் வந்திடுவீர்

விண்மேகத்தில் தூத கணங்களுடன் வரும் நேரம்
எனக்காய் காயப்பட்டதாம் பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடும் மான்களைப்போல நானும் வாஞ்சிக்கிறேன்

வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து நின் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல் எப்போதும் ஆயத்தமே

சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் என் நேசரே

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே

2.ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே

3.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்

4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே

5.மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே

Bethalaiyil Piranthavarai Potri பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி

Bethalaiyil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Monday, 7 October 2019

Samathanam Othum Yesu kiristhu சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

Samathanam Othum Yesu kiristhu
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்

2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்

3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Sunday, 6 October 2019

Raayar Moovar Keelthesam ராயர் மூவர் கீழ்தேசம்

Raayar Moovar Keelthesam
1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்

ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்

2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே — ஓ…

3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் காட்டவுமே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே — ஓ…

4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் — ஓ…

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae
1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்

3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்