Tuesday, 24 September 2019

Paavaththin Palan Naragam பாவத்தின் பலன் நரகம்

Paavaththin Palan Naragam
1.பாவத்தின் பலன் நரகம் நரகம் 
ஓ பாவி நடுங்கிடாயோ,
கண் காண்பதெல்லாம் அழியும் அழியும் 
காணாததல்லோ நித்தியம்
                 
                    இயேசு இராஜா வருவார்
                   இன்னுங் கொஞ்ச காலந்தான்
                   மோட்சலோகம் சேர்ந்திடுவோம்

2.உலக இன்பம் நம்பாதே, நம்பாதே 
அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே 
ஓர் காசும்கூட வராதே

3.உன் காலமெல்லாம் போகுதே, போகுதே 
உலக மாய்கையிலே,
ஓ தேவகோபம் வருமுன், வருமுன் 
உன் மீட்பரண்டை வாராயோ

4.தேவன்பின் வெள்ளம் ஓடுதே,  ஓடுதே 
கல்வாரி மலை தனிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம், நீங்கிப்போம் 
அதில்ஸ்நானம்செய்வதாலே.

5.மாபாவியான என்னையும்,  என்னையும் 
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஒபாவி நீயும் ஓடிவா,  ஓடிவா 
தேவாசீர்வாதம் பெறுவாய்

Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும்

Jeevanulla Devane Varum
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்

1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Monday, 23 September 2019

Antha Naal Inba Inba Inba Naal அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

Antha Naal Inba Inba Inba Naal
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்

2. கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே நீங்குமே நீங்குமே

3. ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம்

4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றுமே

5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்
பருகுவோம் பருகுவோம் பருகுவோம்

Rajathi Rajan Yesu Varuvar இராஜாதி இராஜன் இயேசு வருவார்

Rajathi Rajan Yesu Varuvar
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சந்திக்க ஆயத்தமா ?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா ?

கேள் ! கேள் ! மானிடரே
சந்திக்க ஆயத்தமா ?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா ?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா ?

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா ?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா ?

Par Potrum Venthan பார் போற்றும் வேந்தன்

Par Potrum Venthan
1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா!

2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே!

3. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே!

 4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே!

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar
என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்

1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி

2.உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க  ஆயத்தமா

3.வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்

Saturday, 21 September 2019

Megangal Naduve Vali Pirakkum மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Megangal Naduve Vali Pirakkum
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் (2)

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவிலோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)