Sunday, 8 September 2019

Santhosham Ponguthey சந்தோஷம் பொங்குதே

Santhosham Ponguthey

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன் – சந்தோஷம்

Yesu Enthan Vaalvin இயேசு எந்தன் வாழ்வின்

Yesu Enthan Vaalvin

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

1.எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2.பொல்லா தீமைகள் அகன்றோட
எல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்

3.இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

Saturday, 7 September 2019

Enthan Ullam Thangum எந்தன் உள்ளம் தங்கும்

Enthan Ullam Thangum

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா (2)

2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா (2)

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா  (2)

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா (2)

Ratha Kottaikullae இரத்தக் கோட்டைக்குள்ளே

Ratha Kottaikullae 

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்  --- இரத்தக்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே  --- இரத்தக்

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்   --- இரத்தக்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை   --- இரத்தக்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்   --- இரத்தக்

Friday, 6 September 2019

Iratham Jeyam இரத்தம் ஜெயம்

Iratham Jeyam
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் 
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்  (2)
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்(2)

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் (2)

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் (2)

Isravel En Janame Entrum இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

Isravel En Janame Entrum

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம்
யேகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம்

1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு
தாங்கும் கிருபை தயவு இரக்கம்
தாராளமாயுண்டு   – இஸ்ரவேல்

2. பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட
பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும் நல்ல
ஆசாரியர் உண்டு  – இஸ்ரவேல்

3. செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே – இஸ்ரவேல்

4.சத்துருக்களை சிதற அடித்து
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே சென்று
ஜெயமெடுத்தாரே   – இஸ்ரவேல்

5. பயப்படாதே சிறு மந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் – இஸ்ரவேல்

Thursday, 5 September 2019

Naan Unnai Vittu Vilaguvathillai நான் உன்னை விட்டு விலகுவதில்லை

Naan Unnai Vittu Vilaguvathillai

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்

1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்