Wednesday, 21 August 2019

Nal Meetper Patcham Nillum நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetper Patcham Nillum

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்
ரட்சணிய வீரரே
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்
பின் வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்
எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்
எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்
சர்வயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்
போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றி
பாட்டாக மாறுமே
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.

Yesu Engal Meiper இயேசு எங்கள் மேய்ப்பர்

Yesu Engal Meipar

1. இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் ,
இயேசுவின்பின் செல்வோம்
பாலர் யாவரும்.

2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறியோம்;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்;
கண்டித்தாலும் , நேசர்
ஆற்றித் தேற்றூவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினாரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார் ,
திவ்விய தூய சாயல்
ஆக மற்றுவார்.

4. இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓனாய்கள் வந்தாலும் ,
தொடவே ஒட்டார்;
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்;
பாதாளத்தின்மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.


Tuesday, 20 August 2019

Karththaave ugaugamaai கர்த்தாவே யுகயுகமாய்

Karththaave ugaugamaai

1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்

Enthan Jeevan Yesuve எந்தன் ஜீவன் இயேசுவே

Enthan Jeevan Yesuve

1. எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்

2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்

3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

4. எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்

5. எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்

6. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்

Immaanuvelin Iraththathaal இம்மானுவேலின் இரத்தத்தால்

Immaanuvelin Iraththathaal 

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே

 2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்

5. பின் விண்ணில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன்

Thooya Thooya Thooyaa தூய தூய தூயா

Thooya Thooya Thooyaa 

1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!

3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,

4. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!




Poologaththaarae Yaavarum Karththaavilபூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில்

Poologaththaarae Yaavarum   Karththaavil

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.

2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.